Breaking News

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு அடுத்த 3 நாட்கள் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு!

அட்மின் மீடியா
0

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு அடுத்த 3 நாட்கள் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு!



தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை (பிப்.20) இரவு வரை வறண்ட வானிலை நீடிக்கும். பகலில் வெயிலும், இரவில் பனிப்பொழிவு மற்றும் குளிரும் தொடரும். ஆனால் தாழ்வுப் பகுதியின் தாக்கத்தால் பிப்.21, 22 மற்றும் 23 ஆகிய மூன்று நாட்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

நேற்று (18-02-2026) பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி. இன்று (19-02-2026) காலை 0830 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் இலங்கையை நோக்கி நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் வழுவிழக்கக்கூடும்.

பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்தில் உருவாகக்கூடும்.

20-02-2026: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

21-02-2026: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

22-02-2026: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback