Today Headlines இன்றைய முக்கிய செய்திகள்
Today Headlines இன்றைய முக்கிய செய்திகள்
தமிழ்நாடு முழுவதும் பொங்கல் திருநாள் உற்சாக கொண்டாட்டம்.. புத்தாடை உடுத்தி, புதுப்பானையில் பொங்கலிட்டு தை மகளை வரவேற்கும் தமிழர்கள்.
அவனியாபுரத்தில் சற்று நேரத்தில் தொடங்குகிறது ஜல்லிக்கட்டு.. வாடிவாசலில் களம் காண காத்திருக்கும் காளைகள்.. திமிலை பிடித்து அடக்க தயாராகும் வீரர்கள்.
சென்னையில் இருந்து இதுவரை பேருந்துகள் மூலமாக 9.5 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம். சென்னை திரும்புபவர்களுக்காக நாளை முதல் சிறப்பு பேருந்துகள்
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்பதால் பதற்றமான சூழல்.. ராணுவத்தினர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க ஈரான் அரசு உத்தரவு.
இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியாவை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து.. இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலை
ஜனநாயகன்' சென்சார் விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது! உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு தலைமை நீதிபதி அமர்வு தடை விதித்த நிலையில், பட தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்திருந்தது.
கிரீன்லாந்தை அமெரிக்காவிடம் இருந்து பாதுகாக்க ராணுவப் படைகளை குவிக்கிறது டென்மார்க்!விமானப்படை, கடற்படை மற்றும் தரைப்படை [வீரர்களை அங்கு அனுப்புவதாகவும், NATO நட்பு நாடுகளின் படைகளும் தங்களுடன் இணைந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் எனவும் தெரிவித்து டென்மார்க் அரசு அறிக்கை.
தமிழ்நாட்டில் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - அரசு உத்தரவு
பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் மூலம் 9.20 லட்சம் பேர் பயணம்
பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோருக்கான மேலும் ஒரு சிறப்பு ரயில். நெல்லை-தாம்பரம் இடையே வரும் 18ஆம் தேதி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு
பறை இசைத்து சென்னை சங்கமத்தை தொடங்கிவைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். வரும் 18ஆம் தேதி வரை 20 இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் என அறிவிப்பு
சென்னையில் போராட்டத்தின்போது விஷம் குடித்த பகுதிநேர ஆசிரியர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
பகுதிநேர ஆசிரியர்களுக்கான ஊதியம் 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு. எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என போராட்டக் குழுவினர் அதிருப்தி
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி தரிசனம். ஜோதி வடிவில் காட்சியளித்த ஐயப்பனை சரண முழக்கமிட்டு கண்டு தரிசித்த பக்தர்கள்
நாட்டின் வர்த்தக தலைநகரை கைப்பற்றப்போவது யார்?. மஹாராஷ்டிராவில் மும்பை உள்பட 29 மாநகராட்சிகளுக்கு இன்று உள்ளாட்சி தேர்தல்
Tags: தமிழக செய்திகள்

