News Headlines Today இன்றைய முக்கிய செய்திகள்
News Headlines Today இன்றைய முக்கிய செய்திகள்
கள்ளக்குறிச்சி மணலூர்பேட்டையில் ஹீலியம் சிலிண்டர் வெடித்து பெண் ஒருவர் உயிரிழந்த வழக்கில் பலூன் கடை உரிமையாளர் ஏழுமலை மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு. மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்பட்டது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை
ஈராக் ராணுவ தளங்களில் இருந்து சுமார் 23 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறியது! இனி அமெரிக்கா உடனான உறவு, நேரடி ராணுவ தலையீடாக இல்லாமல், இருதரப்பு பாதுகாப்பு உறவாக மட்டுமே இருக்கும் என ஈராக் அறிவிப்பு. கடந்த 2003ல் சதாம் உசேன் ஆட்சியை கவிழ்க்க ஈராக்கை அமெரிக்கா படையெடுத்தது குறிப்பிடத்தக்கது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர். ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது.
பா.ஜ.க தேசிய தலைவராக நிதின் நபின் போட்டியின்றி தேர்வு. பா.ஜ.க தலைவராக இன்று முறைப்படி பொறுப்பேற்கிறார் நிதின் நபின்.
நடிகர் விஜயின் 'ஜனநாயகன்' படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க தனி நீதிபதி உத்தரவிட்டதற்கு எதிராக திரைப்பட தணிக்கை வாரியம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணை. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் அமர்வில் காலை 11.30 மணியளவில் விசாரணைக்கு வரவுள்ளது,
டெல்லி வந்த ஐக்கிய அரபு அமீரகம் அதிபர் ஷேக் முகமது பின்னுடன் பிரதமர் மோடி ஆலோசனை; இருநாடுகள் இடையே பாதுகாப்பு, எரிசக்தி, விண்வெளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒப்பந்தம் கையெழுத்து இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே பாதுகாப்பு உறவை பலப்படுத்தும் வகையில் புதிய உத்திசார் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!தளவாட உற்பத்தி, சைபர் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, தொழில்நுட்ப பகிர்வு, கடல்சார் பாதுகாப்பு, போன்றவைகளில் இணைந்து செயல்பட முடிவு.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்று மாலை 6:30 மணிக்கு திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! 2026 சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி, பரப்புரை வியூகம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க வாய்ப்பு என தகவல்.
திருப்போரூர் அருகே சென்னையின் குடிநீர் தேவைக்காக ஆறாவது நீர்த்தேக்கத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்; திமுக ஆட்சிக் காலங்களில் 43 அணைகள் கட்டப்பட்டுள்ளதாக பெருமிதம்
மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டத்தை கைவிட எதிர்க்கட்சித் தலைவர்கள், சூழலியல் அமைப்புகள் வலியுறுத்தல்; மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என நீர்வளத் துறை விளக்கம்,
தமிழகத்தில் ஜன.22-ம் தேதி வரை வறண்ட வானிலையும், 23 முதல் 25 வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் - தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட குறைவாக இருக்கக்கூடும் என வானிலை மையம் தகவல்
சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் இன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டம்; சென்னையில் சமூக நலத்துறை அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி
தென்சீனக் கடல் பகுதியில் புதிய எரிவாயு இருப்பு கண்டுபிடிப்பு - பிலிப்பைன்ஸ் அதிபர் அறிவிப்பு
ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார், சைத்ரா அச்சார் நடிப்பில் உருவாகியுள்ள 'மை லார்ட்' - ட்ரெய்லர் வெளியீடு
மகளிர் ப்ரீமியர் லீக் 2026 - குஜராத் அணியை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி
அதிமுக - பாஜக இடையே நாளை மறுநாள் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தகவல்; 23ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான பொதுக்கூட்டத்தில் கூட்டணி தலைவர்கள் அனைவரும் ஒன்றாக பங்கேற்க ஏற்பாடு
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மேலும் கால அவகாசம் நீட்டிப்பு; வரும் 30ஆம் தேதி வரை பெயர் சேர்க்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு
புதுச்சேரியில் மகளிருக்கு வழங்கப்படும் மாதந்திர உதவித்தொகை 1000 ரூபாயில் இருந்து 2500 ரூபாயாக உயர்வு -உயர்த்தப்பட்ட மாதந்திர உதவித்தொகை பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் வழங்கப்படும் - முதலமைச்சர் ரங்கசாமி
Tags: தமிழக செய்திகள்
