நாடு முழுவதும் ஜனவரி 27 ம் தேதி வங்கி வேலைநிறுத்தம் அறிவிப்பு - தொடர்ந்து 4 நாட்கள் வங்கி செயல்படாது bank strike
ஜனவரி 27ஆம் தேதியன்று வங்கி வேலை நிறுத்தம் என்பது, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர் சங்கங்கள் நடத்தும் நாடு தழுவிய போராட்டமாகும்
ஜனவரி 27, 2026 அன்று அகில இந்திய வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். அன்றைய தினத்தில் நாடு தழுவிய பொது மற்றும் தனியார் வங்கிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் என்று ஐக்கிய வங்கி தொழிற்சங்கங்கள் மன்றம் (UFBU) அறிவித்துள்ளது
வேலை நிறுத்தத்திற்கான காரணங்கள்:
வேலைப்பளு: டிஜிட்டல்மயமாக்கல் காரணமாக ஊழியர்களின் வேலை அதிகரிப்பு.
ஊழியர் பற்றாக்குறை: போதுமான ஆள்சேர்ப்பு இல்லாதது மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான வேலைவாய்ப்பு.
தனியார்மயமாக்கல்: பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க மத்திய அரசின் முயற்சிகளை எதிர்த்தல்.
வேலை நேரம்: வேலை நேரம் அதிகரிப்பு மற்றும் குறைவான பணியாளர்களுடன் வேலை செய்வது.
சம்பள மற்றும் சீர்திருத்தங்கள்: ஊதிய உயர்வு மற்றும் வங்கி சீர்திருத்தங்கள் தொடர்பான கோரிக்கைகள்.
போன்ற காரணங்களுக்காக ஒரு வேலை நிறுத்தம் திட்டமிடப்பட்டுள்ளது; இந்த வேலை நிறுத்தங்களால், வங்கிகளின் வழக்கமான செயல்பாடுகள் பாதிக்கப்படும், இருப்பினும் ஆன்லைன் சேவைகள் தொடரும்.
வேலை நிறுத்தம்:-
வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான UFBU வரும் ஜனவரி 27 அன்று நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதனால் நாடு முழுவதும் உள்ள அரசு வங்கிகள் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் இயங்காது. ஜனவரி 24 (நான்காவது சனிக்கிழமை), ஜனவரி 25 (ஞாயிறு), ஜனவரி 26 (குடியரசு தின விடுமுறை) என வரிசையாக விடுமுறை வருவதால், ஜனவரி 27-ல் வேலைநிறுத்தம் நடந்தால், மீண்டும் ஜனவரி 28-ம் தேதி அன்றுதான் வங்கிகள் திறக்கப்படும்.
அவசரத் தேவைகள் உள்ள வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுங்கள்
