Breaking News

News Headlines Today இன்றைய முக்கிய செய்திகள்

அட்மின் மீடியா
0

News Headlines Today இன்றைய முக்கிய செய்திகள் 


தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் திடீரென கொட்டித்தீர்த்த கனமழை. சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமம்.

திருப்பதியில் சொர்க்கவாசல் தரிசனத்திற்காக 3 கிலோ மீட்டர் தூரம் வரை காத்திருக்கும் பக்தர்கள். தரிசனத்திற்கு 24 மணி நேரம் ஆகும் என அதிகாரிகள் தகவல்

ஜம்மு-காஷ்மீரில் பாலஸ்தீன கொடியுடன் கிரிக்கெட் விளையாடியதால் சர்ச்சை. விளக்கம் கோரி கிரிக்கெட் வீரருக்கு காவல்துறை சம்மன்.

2025-ம் ஆண்டில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மொத்தம் 13 கோடியே 52 லட்சம் லட்டுகள் விற்பனை 2024 ஆம் ஆண்டை விட 10 சதவீதம் விற்பனை அதிகரித்திருப்பதாக திருமலை தேவஸ்தானம் தகவல்.

ஜி.எஸ்.டி குறைக்கப்பட்டதால் 2025 ஆம் ஆண்டில் கார்கள் விற்பனை கணிசமாக அதிகரிப்பு - மகிந்திரா, டோயட்டோ, கியா நிறுவன கார்களின் விற்பனை 10 சதவீதத்திற்கு மேல் உயர்வு.

கவுகாத்தி - கொல்கத்தா இடையே இயக்கப்படுகிறது படுக்கை வசதியுடன் கூடிய முதல் வந்தே பாரத் ரயில் புதிய ரயில் சேவையை பிரதமர் மோடி விரைவில் தொடங்கி வைக்க உள்ளதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு...

புத்தாண்டை ஒட்டி இந்தியா - பாகிஸ்தான் இடையே கைதிகள் பெயர் பட்டியல் பரிமாற்றம் - இருநாட்டு சிறைகளில் உள்ள இந்திய, பாகிஸ்தான் குடிமக்கள், மீனவர்கள் குறித்த தகவல்களை இருதரப்பு ஒப்பந்தப்படி பரிமாற்றம்...

சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 40 பேர் உயிரிழப்பு, 115 பேர் படுகாயம்.கிரான்ஸ் மொன்டோனா நகரத்தில் செயல்பட்டு வரும் Le Constellation என்ற மதுபான பாரில், பயங்கர வெடிச்சத்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவி கட்டடத்தை முழுவதுமாக சூழ்ந்ததால் உள்ளே இருந்தவர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர்.

10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ள ஜாக்டோ-ஜியோ அமைப்புடன் தமிழ்நாடு அரசு சென்னையில் இன்று 2ம் கட்ட பேச்சுவார்த்தை. கடந்த 22ம் தேதி அமைச்சர்கள் குழுவுடன் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவுகள் எட்டப்படாததால், அமைச்சர் எ.வ.வேலு பேச்சுவார்த்தை.

கோவை, நீலகிரி மாவட்ட மலையோர பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு. குமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் பரவலான மழை பெய்யும் என வானிலை மையம் கணிப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல். அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்குமெனவும் கணிப்பு.

தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். சூறைக்காற்று வீசுவதால் மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை.

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்கா கந்தூரி விழாவிற்கு தடைக் கோரிய வழக்கு. உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று விசாரணை

2026 தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டில் கூட்டணி அமைச்சரவை உருவாக வாய்ப்புள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் கருத்து.

அரசு ஊழியர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் உச்சவரம்பிற்கு உட்பட்டு பொங்கல் போனஸ் அறிவிப்பு. 9.90 லட்சம் ஊழியர்களுக்கு மிகை ஊதியம் வழங்க 183.86 கோடி ரூபாய் ஒதுக்கீடு

நியூயார்க் நகரத்தின் முதல் இஸ்லாமிய மேயராக ஜோஹ்ரான் மம்தானி, கைவிடப்பட்ட ரயில் நிலைய சுரங்கப்பாதையில் வைத்து பொறுப்பேற்றுகொண்டார்.நகர வரலாற்றில் முதல்முறையாக குர்ஆன் மீது கை வைத்து மம்தானி பொறுப்பேற்றார்.

டிசம்பர் 25-ம் தேதி உலகம் அழியப்போகிறது” | என்று கூறி மக்களிடையே பீதியை ஏற்படுத்திய எபோ நோவா என்பவரை கானா நாட்டு  காவல்துறையினர் கைது செய்தனர். எபோ நோவா மழுப்பலாக வீடியோ வெளியிட்ட நிலையில், அவரை பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதாகக்கூறி காவல்துறை இன்று கைது செய்தது


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback