NEWS HEADLINES TODAY இன்றைய தலைப்பு செய்திகள்
NEWS HEADLINES TODAY இன்றைய தலைப்பு செய்திகள்
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கின் விசாரணைக்காக சிபிஐ முன் ஆஜராக, இன்று டெல்லி செல்கிறார் விஜய். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்லவுள்ளார். தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ், நிர்மல் உள்ளிட்டோரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டது
இலங்கையில் தமிழர் தன்னாட்சி உரிமை புறக்கணிப்பு என முதலமைச்சர் வேதனை. புதிதாக கொண்டு வரப்படும் அரசியலமைப்பு சீர்திருத்தத்தை தடுக்க பிரதமர் மோடிக்கு கடிதம்.
அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் கடிதம். அதிமுகவுடன் கூட்டணி வைத்திருப்பது சட்ட விரோதம் என்றும் காட்டம்.
இந்தி மொழியை மராத்தியர்கள் மீது திணித்தால் உதை விழும் என ஆவேசம். மும்பை மாநகராட்சி தேர்தல் பிரச்சாரத்தில் ராஜ் தாக்கரே எச்சரிக்கை.
நியூசிலாந்திற்கு எதிரான ஒரு நாள் தொடரை வெற்றியுடன் தொடங்கியது இந்தியா. வதோதரா போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.
சென்னை மாநகரப் பேருந்துகள், மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய பயன்படுத்தும் சிங்கார சென்னை அல்லது தேசிய பொதுப் போக்குவரத்து அட்டையை இனி பேருந்து நடத்துனர்களிடமும் பெறலாம். ரூ.100 செலுத்தி வாங்கும் அட்டையை பயன்படுத்தி ரூ.50 பயணம் செய்யலாம் எனவும், Online மூலம் கூடுதல் ரீசார்ஜ் செய்து பயணத்தை தொடரலாம் என தெரிவிப்பு.
Tags: தமிழக செய்திகள்
.jpg)