இன்றைய தலைப்பு செய்திகள் News Headlines Today
இன்றைய தலைப்பு செய்திகள் News Headlines Today
2025-ஆம் ஆண்டு விடைபெற்று, புத்துணர்ச்சியுடன் பிறந்தது 2026-ஆம் ஆண்டு - ஆங்கில புத்தாண்டை வரவேற்று உலகெங்கும் மக்கள் உற்சாக கொண்டாட்டம்
சென்னை மெரினா கடற்கரையில் சாரல் மழைக்கு நடுவே புத்தாண்டு கொண்டாட்டம் - மழையைப் பொருட்படுத்தாமல் ஆடிப்பாடி இளைஞர்கள் உற்சாகம்
பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு ரூ.248 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு - ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கரும்பு வழங்கப்படும் என அறிவிப்பு
2026 புத்தாண்டு, தமிழகத் தேர்தல் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயம் என்பதை மக்கள் நிரூபிக்கப் போவது நிச்சயம் தமிழக அரசியலின் நேர்மைமிகு நம்பிக்கை ஒளியாய், நாளைய தலைமுறைகளின் தலைசிறந்த வழியாய் நாமே மாறுவோம் - தமிழக வெற்றிக்கழக விஜய் புத்தாண்டு வாழத்து
ஒடிசா மாநிலம் சண்டிப்பூரில் உள்ள தளத்தில் இருந்து இரு ஏவுகணைகளை ஏவி பரிசோதனை - 500 கி.மீ. தூரம் வரை சென்று தாக்கும் பிரலே ஏவுகணைகளின் சோதனை வெற்றி என பாதுகாப்புத்துறை அறிவிப்பு
2026ம் ஆண்டின் முதல் நாளிலேயே வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.110 உயர்ந்து ரூ.1849.50க்கு விற்பனை.
ஜன.4 முதல் 10 வரை.. சென்னையில் சர்வதேச பாய்மர படகு போட்டி நடைபெற உள்ளது.. முழு செலவுகளையும் ஏற்கும் தமிழக அரசு..
சென்னையில் அடாது மழை பெய்தாலும் விடாது பணி செய்த தூய்மைப் பணியாளர்கள். மழையிலும் கடமை ஆற்றிய தூய்மைப் பணியாளர்களுக்கு மக்கள் பாராட்டு.
டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகளிடம் 3வது நாளாக விசாரணை. கரூர் உயிரிழப்புகள் குறித்து புஸ்ஸி ஆனந்த், ஆதவ், நிர்மல் குமாரிடம் கிடுக்கிப்பிடி.
வரும் 4-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. தேர்தல் தொடர்பாக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த திட்டம்
ஒரே வாகனத்தில் இருந்து இரண்டு ஏவுகணைகளை வெற்றிகரமாக ஏவி இந்தியா சாதனை. ஒரே நேரத்தில் இரண்டு இலக்குகளைத் தாக்க முடியும் என்றும் டிஆர்டிஓ அறிவிப்பு
ஜனவரி 6-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம்... இடைக்கால பட்ஜெட் குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவல்
ஒரு லட்சத்துக்கும் கீழ் வந்தது ஆபரணத் தங்கத்தின் விலை. ஒரே நாளில் சவரனுக்கு 960 ரூபாய் குறைந்து 99 ஆயிரத்து 840-க்கு விற்பனை
Tags: தமிழக செய்திகள்
