Breaking News

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மும்பையில் இலவச சிகிச்சை என பரவும் தகவல் உண்மை என்ன முழு விவரம் kem hospital mumbai fake news

அட்மின் மீடியா
0

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மும்பையில் இலவச சிகிச்சை என பரவும் தகவல் உண்மை என்ன முழு விவரம் kem hospital mumbai fake news


சமூக வலைதளங்களில் பரவும் செய்தி:-

மும்பையின் பரேலில் உள்ள கேஇஎம் மருத்துவமனை, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை 24 மணி நேரத்திற்குள் அனுமதிக்கிறது. ஒரு தானியங்கி இயந்திரத்தின் மூலம் நோயாளி சில மணி நேரங்களிலேயே இந்த நோயிலிருந்து குணமடைகிறார். ஆஞ்சியோபிளாஸ்டி செய்வது போல, இந்த இயந்திரத்தின் உதவியுடன் நோயாளியின் மூளைக் கட்டிகள் அகற்றப்படுகின்றன. இந்த வசதி இந்தியாவில் முதல் முறையாக இந்த மருத்துவமனையில் கிடைக்கிறது. உலகில் ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே இதுபோன்ற இயந்திரங்கள் உள்ளன. டாக்டர் நிதின்ஜி டாங்கே (நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்) இந்த இயந்திரத்தைக் கையாள்வதில் உலகப் புகழ்பெற்றவர். பிருஹன்மும்பை மாநகராட்சி இந்த இயந்திரத்தை திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தது.

தயவுசெய்து இந்தத் தகவலை அனைவருக்கும் பகிருங்கள், இது பயனுள்ளதாக இருக்கும்... நீங்கள் உறுப்பினராக உள்ள ஒவ்வொரு குழுவிலும் இதை இடுங்கள்.

மேலும், பிறவியிலிருந்தே காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத எந்தக் குழந்தையையாவது உங்களுக்குத் தெரிந்தால், இப்போது கோக்லியர் இம்ப்ளான்ட் அறுவை சிகிச்சையின் கண்டுபிடிப்பால் அந்தக் குறைபாடுள்ள குழந்தையைக் குணப்படுத்துவது சாத்தியமாகியுள்ளது. இந்த அறுவை சிகிச்சைக்கு சுமார் 10 முதல் 12 லட்சம் ரூபாய் செலவாகும், ஆனால் கவலை வேண்டாம், இப்போது ரோட்டரி கிளப் ஆஃப் பாம்பே வோர்லி, மாவட்டம் 3141-இன் உதவியுடன், இந்த அறுவை சிகிச்சை மும்பையில் உள்ள எஸ்ஆர்சிசி மருத்துவமனையில் இலவசமாக செய்யப்படுகிறது. தேவைப்படும் மக்களை இந்தச் செய்தி சென்றடைய, தயவுசெய்து மற்ற குழுக்களிலும் பகிரவும்.

தொடர்புக்கு :- ரோட்டரி கிளப் ஆஃப் பாம்பே வோர்லி டிஜி ஆர்.டி.என் ராஜேந்திர அகர்வால் 9820085149

முக்கியமான செய்தி. முடிந்தவரை பகிரவும்..! சிறந்த தகவல் கிடைத்தவுடனேயே நான் பகிர்ந்துள்ளேன் இந்த ஆபத்தான உடல்நலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட அனைத்துத் தேவைப்படும் மக்களையும் சென்றடைய நீங்கள் அனைவரும் தயவுசெய்து பகிருங்கள்...✍️🙏


உண்மை என்ன:-

பக்கவாதத்தின் முதல் 24 மணி நேரத்திற்குள் மட்டுமே நோயாளிகளுக்கு இது உதவ முடியும் என்றும் ஏற்க்கனவே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதன் மூலம் சிகிச்சையளிக்க இதைப் பயன்படுத்த முடியாது என்றும் KEM நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் தெளிவுபடுத்துகிறார்.

மேலும்  இதே சிகிச்சை மதுரை அரசு மருத்துவமனையிலும் உள்ளது.

மூளை நரம்பியல் துறையில் ரூ.18 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 'நியூரோ கேத்லேப்' கருவி மூலம், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் பாதிப்பை சரிசெய்ய முடியும் 

ரத்தக்குழாயின் வழியே சிறிய குழாயை (கதீட்டர்) செலுத்தி எந்த இடத்தில் அடைப்பு உள்ளதோ அந்த இடத்தில் செலுத்தி அடைப்பை நீக்குவதே இதன் வேலை. 

பக்கவாதம் வந்த நான்கு மணி நேரத்திற்குள் சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்டால் 'அல்டிபிளேஸ்' எனும் மருந்தை செலுத்தி மூளை தமனியில் உள்ள அடைப்பை கரைத்துவிடலாம். 

அதற்கு மேல் தாமதம் எனில் பக்கவாதத்தால் ஏற்படும் பாதிப்பும் அதிகமாகும். அதுபோன்ற சமயங்களில் 'நியூரோ கேத்லேப்' கருவி மூலம் பாதிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் பாதிப்பை சரிசெய்யலாம். 

இதிலுள்ள டிஜிட்டல் சப்ட்ராக் ஷன் ஆஞ்சியோகிராபி (டி.எஸ்.ஏ.,) மூலம் எந்த ரத்தக்குழாயில் அடைப்பு வந்துள்ளது என்பதை கண்டறியலாம். அதன்பிறகு 'மெக்கானிக்கல் த்ராம்பெக்டமி' மூலம் 24 மணி நேரத்திற்குள் மூளையில் தற்காலிக 'ஸ்டென்ட்' பொருத்தி அடைப்பை சரிசெய்யலாம். 

மேலும் ரத்தக்குழாய் விரிவடைந்திருந்தால் (அனுரிஸம்) 'கிளிப்பிங், காயிலிங்' முறையில் சரிசெய்யலாம். இந்த கருவியால் பக்கவாத பாதிப்புக்குள்ளானவர்கள் சேதாரமின்றி சிகிச்சை பெற முடியும். பயிற்சி பெற்ற டாக்டர்கள் மூலம் ஒருநாளைக்கு 2 பேருக்கு சிகிச்சை அளிக்க முடியும். முதல்வரின் இலவச காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறலாம் 

ஆதாரம்:-

https://mumbaimirror.indiatimes.com/mumbai/cover-story/whatsapp-rumour-of-paralysis-cure-sends-patients-haring-to-kem/articleshow/66483449.html

Tags: FACT CHECK

Give Us Your Feedback