குற்றப்பத்திரிகையில் விஜய் பெயரா? டெல்லியில் நடந்தது என்ன நிர்மல்குமார் விளக்கம் karur stampede issue vijay in cbi investigation
கரூரில் கடந்த ஆண்டு (செப்டம்பர் 27) ஆம் தேதி தமிழக வெற்றி கழகம் சார்பில் நடத்திய பிரச்சார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டு மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து வழக்கு தொடரப்பட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு சிபியை விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் மேலும் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கி அதிகாரிகள் மக்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதனை தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தின் தலைவரை விசாரணை ஆஜராக சொல்லி சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் முதற்கட்டமாக கடந்த (ஜன 12) தேதி விஜய் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை செயலகத்தில் விசாரணை ஆஜரான நிலையில் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரண்டாம் கட்ட விசாரணை விஜய்யின் கோரிக்கையின் பேரில் ஒத்திவைத்த சிபிஐ அதிகாரிகள் இன்று மீண்டும் விஜய்யை ஆஜராக சொல்லி சம்மன் அனுப்பி இருந்தனர்.எனவே இன்று மீண்டும் டெல்லி சிபிஐ தலைமை செயலகத்தில் விசாரணைக்காக ஆஜரான விஜய்யிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் கரூர் விவகாரத்தில் அடுத்த மாதம் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் அதில் விஜய்யின் பெயர் இடம்பெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது
இந்நிலையில் தவெக நிர்வாகி நிர்மல்குமார் டெல்லியில் பேட்டியளித்தார்.அப்போது பேசிய சிடிஆர் நிர்மல்குமார், “கரூர் சம்பவம் குறித்து சிபிஐயிடம் உரிய விளக்கம் அளித்தோம். விஜயிடம் நடந்த சிபிஐ விசாரணை தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரப்பப்படுகின்றன. தவெக தலைவர் விஜயிடம் சிபிஐ நடத்திய விசாரணை தொடர்பாக பல தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. குற்றப்பத்திரிகையில் விஜய் பெயர் சேர்க்கப்படும் என சில ஊடகங்கள் தவறான தகவல்களை பரப்புகின்றன. விஜய் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக எந்த சம்மனும் வழங்கப்படவில்லை” என்றார்.
Tags: அரசியல் செய்திகள்
