HEADLINES TODAY இன்றைய தலைப்பு செய்திகள்
HEADLINES TODAY இன்றைய தலைப்பு செய்திகள்
மன்னார் வளைகுடா பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது - வானிலை மையம்
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து PSLV -C62 ராக்கெட் ராக்கெட் ஏவப்பட உள்ளதால் பாதுகாப்பு கருதி நாளை (ஜன.12) திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவு.
வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையில் கரையை கடந்தது. சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை சிதைக்கும் ஒன்றிய அரசுக்குக் கண்டனம். நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் கட்சியினர் இன்று உண்ணாவிரதப் போராட்டம்.
ஜன.1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம். அரசு ஊழியர்களின் 23 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றும் அரசாணை வெளியீடு.
ஈரானில் அரசுக்கு எதிராக வெடித்த போராட்டம் நாடு முழுவதும் பரவியது. அரசு அலுவலகங்கள் தீ வைப்பு, வன்முறையில் சிக்கி இதுவரை 65 பேர் உயிரிழப்பு.
வதோதராவில் இந்தியா - நியூசிலாந்து இடையே இன்று முதலாவது ஒரு நாள் போட்டி. மதியம் 1.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் வெற்றிபெற இரு அணிகளும் முனைப்பு
நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள தனியார் பள்ளியின் பொன்விழா நிகச்சியில் பங்கேற்க ஜன. 13ம் தேதி தமிழ்நாடு வருகிறார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
சுற்றுலா பயணிகளுக்காக சென்னையில் குளிர்சாத வசதியுடன் மின்சார டபுள் டெக்கர் பேருந்து சேவை மீண்டும் அறிமுகம் அடையாறு முதல் மாமல்லபுரம் வரையிலான (12.01.2026) की வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் இருந்து மேலும் மூன்று அம்ரித் பாரத் ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை திருச்சி, தாம்பரம், நாகர்கோவிலில் இருந்து மேற்கு வங்கத்திற்கு ரயில்களை இயக்க திட்டம்
பிரான்சிடம் இருந்து கூடுதலாக ரபேல் போர் விமானங்களை வாங்க இந்திய அரசு நடவடிக்கை பிரான்ஸ் அதிபர் அடுத்த மாதம் இந்தியா வரும் போது ஒப்பந்தம் கையெழுத்தாகுமென தகவல்
நாட்டின் அரிசி ஏற்றுமதி 21.55 மில்லியன் மெட்ரிக் டன்களாக உயர்வு - கடந்த ஆண்டை விட 19.4 சதவிகிதம் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தகவல்
வெனிசுலா எண்ணெய் வருவாயைப் பாதுகாக்கும் உத்தரவில் கையெழுத்திட்ட அதிபர் டிரம்ப் - இதன் மூலம் கச்சா எண்ணெய் வருவாயை நீதித்துறை (அ) சட்ட நடவடிக்கை மூலம் உரிமை கோர முடியாது
நியூசிலாந்திற்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டித்தொடரில் இருந்து ரிஷப் பந்த் விலகல் வயிற்றில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என அறிவிப்பு
100 நாள் வேலை திட்டத்தில் மத்திய அரசு மாற்றம் செய்ததை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம். 100 நாள் வேலை திட்ட பெயர் மாற்றத்தை கண்டித்து பிப்.25 வரை நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களில் காங்கிரஸ் போராட்டம் அறிவிப்பு
TAPS திட்டத்தில் ஊழியர்களின் மாத ஊதியத்தில் 10% பங்களிப்பாக பெறப்படும் - கடைசியாக பெற்ற ஊதியத்தில் 50 விழுக்காடு ஓய்வூதியமாக வழங்கப்படும் என அரசாணையில் தகவல்
தபால் துறையில் தபால்களை ஒரு மாநிலத்திற்குள் உள்ள உரிய முகவரியில் 24 மணி நேரத்திற்குள் ஒப்படைப்பது உள்ளிட்ட 2 சேவைகளை தொடங்கி வைத்தார் ஜோதிராதித்ய சிந்தியா
மெரினா கடற்கரையில் குப்பைகளை கொட்டினால் ரூ.5000 அபராதம் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி, நாமக்கல், சேலம், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
ஈரானில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்; காமேனி அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் 3ஆவது வாரத்தை நெருங்கியுள்ள நிலையில் எச்சரிக்கை
ஈரான் முன்னெப்போதும் இல்லாத வகையில் சுதந்திரத்தை எதிர்நோக்குகிறது; அமெரிக்கா உதவ தயாராக இருப்பதாகவும் அதிபர் ட்ரம்ப் பரபரப்பு கருத்து
சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ள மாநில முதல்வர்கள் மற்றும் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஆலோசனைக் குழு அமைக்க வேண்டும்; பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளை தாண்டி வெல்வோம்; கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை
ஆட்சி அதிகாரத்தில் பங்கு போன்றவற்றை பொதுவெளியில் பேசக்கூடாது; உத்தரவை மீறி செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்வாகிகளுக்கு காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை எச்சரிக்கை
Tags: தமிழக செய்திகள்
.jpg)