FREE LAPTOP...! இலவச லேப்டாப் பெற விண்ணப்பிக்க என பரவும் அந்த லிங்கை மட்டும் தொடாதீங்க..! தமிழக அரசு கடும் எச்சரிக்கை..!
FREE LAPTOP...! இலவச லேப்டாப் பெற விண்ணப்பிக்க என பரவும் அந்த லிங்கை மட்டும் தொடாதீங்க..! தமிழக அரசு கடும் எச்சரிக்கை..!
தமிழக அரசு உலகம் உங்கள் கையில்" என்ற பெயரில் இந்தத் திட்டம் 2025-26 நிதியாண்டில் அறிவிக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜனவரி 5 அன்று சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இதன் தொடக்க விழாவை நடத்தி, முதற்கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகளை வழங்கத் தொடங்கினார்.
மொத்தத்தில் இரண்டு கட்டங்களாக 20 லட்சம் கல்லூரி மாணவ, மாணவியருக்கு இலவசமாக மடிக்கணினிகள் கொடுக்கப்படும் என்று தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக அரசின் இலவச மடிக்கணினி திட்டத்தில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்" என்று ஒரு லிங்கைப் பகிர்ந்து வருகின்றனர். ஆனால் தமிழ்நாடு அரசு இதுபோன்ற தகவல்களை மறுத்துள்ளது.
தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம், இலவச மடிக்கணினி திட்டத்திற்கு எந்த ஆன்லைன் விண்ணப்ப முறையும் இல்லை என்று கூறியது. அரசு எந்த இணையதளம் அல்லது டிஜிட்டல் போர்ட்டலில் விண்ணப்பிக்கச் சொல்லவில்லை என்றும், அத்தகைய லிங்குகள் போலியானவை என்றும் எச்சரித்தது. இதேபோல், தமிழ்நாடு சைபர் க்ரைம் போலீஸ் பிரிவும் சமூக வலைதளங்களில் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
Tags: FACT CHECK தமிழக செய்திகள்
