அங்கீகாரமில்லாத மனைகள் பதிவு செய்தால் கிரிமினல் வழக்கு பாயும் - பத்திரப் பதிவுத் துறை எச்சரிக்கை
அட்மின் மீடியா
0
அங்கீகாரமில்லாத மனைகள் பதிவு செய்தால் கிரிமினல் வழக்கு பாயும் - பத்திரப் பதிவுத் துறை எச்சரிக்கை
அங்கீகாரமில்லாத மனைகள் தொடர்பான பத்திரங்களை , பதிவுக்கு ஏற்க கூடாது அப்படியே பதிவானால் சம்பந்தப்பட்ட பத்திரங்கள் ரத்து செய்யப்படுவதுடன், சம்பந்தப்பட்ட அனைவர் மீதும், கிரிமினல் வழக்கு பாயும் என பதிவுத்துறை எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக சார் பதிவாளர் அலுவலகங்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் கூறியிருப்பதாவது ;
அங்கீகாரமில்லாத வரன்முறை செய்யப்படாத, வீட்டு மனை விற்பனை தொடர்பான பத்திரங்களை பதிவு செய்ய, தடை விதிக்கப்பட்டுள்ளது. இது போன்ற பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டால், அதை சார் - பதிவாளர்கள், பதிவுக்கு ஏற்கக் கூடாது. இதை மீறி பத்திரப்பதிவு செய்யப்பட்டது தெரிய வந்தால், சம்பந்தப்பட்ட பத்திரம் ரத்து செய்யப்படும். அத்துடன், சம்பந்தப்பட்ட ஆவணதாரர்கள் உட்பட அனைவர் மீதும், கிரிமினல் வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்
