Breaking News

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் கருத்துக் கேட்டு மத்திய அரசு கடிதம்..!

அட்மின் மீடியா
0

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் கருத்துக் கேட்டு மத்திய அரசு கடிதம்..!



ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு அரசு தனது கருத்தை தெரிவிக்க கோரி ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த ஒன்றிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்திற்கான சாத்திய கூறுகளை ஆராய முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு இதுதொடர்பான வரைவு மசோதாவை தயாரித்து ஒன்றிய அரசிடம் சமர்ப்பித்தது. 

இந்த மசோதா மாநிலங்களவை, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் விசாரணைக்கு அனுப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு அரசு தனது கருத்தை தெரிவிக்க கோரி ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. ஒன்றிய உள்துறை அமைச்சகம் தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. தமிழ்நாடு அரசின் பொது தேர்தல்கள் துறை மற்றும் சட்டத்துறை இணைந்து ஆலோசனை மேற்கொண்டு இந்த கடிதத்திற்கு விரைவில் பதில் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மார்ச் 2027ம் முதல் தொடங்க உள்ள நிலையில், மக்கள் தொகை கணகெடுப்பு முடிந்த பிறகு தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டு அதன் பிறகு தான் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback