இன்றைய தலைப்புச் செய்திகள்
இன்றைய தலைப்புச் செய்திகள்
பொங்கல் பண்டிகையை கொண்டாட பலரும் நேற்றிரவே தங்களது சொந்த ஊர்களுக்கு கிளம்பியதால், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் அதிகளவு கூட்டம் காணப்பட்டது.
மாதவரம் மணலி ஏரியில் படகு சவாரியை தொடங்கி வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் மேயர் பிரியா.
சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழாவை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சென்னையில் 20 இடங்களில் நடத்த ஏற்பாடு.
தமிழ்நாடு முழுவதும் போகிப் பண்டிகை கொண்டாட்டம். கடும் குளிரிலும் பழைய பொருட்களை எரித்தும், மேளம் கொட்டியும் உற்சாகம்.
பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு புறப்பட்ட மக்கள். ஜி.எஸ்.டி.சாலை, பரனூர், விக்கிரவாண்டி சுங்கச்சாவடிகளிலும் போக்குவரத்து நெரிசல்.
கரூர் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்க்கு மீண்டும் சம்மன். வரும் 19-ம் தேதி டெல்லியில் ஆஜராக சிபிஐ உத்தரவு.
தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கூட்டணி பற்றி அறிவிப்பு. தை பிறந்தால் தமிழ்நாட்டில் மாற்றம் நிகழும் என்றும் பிரேமலதா கருத்து.
ஈரானின் அரசு நிறுவனங்களைக் கைப்பற்ற போராட்டக்காரர்களுக்கு அழைப்பு விடுத்த ட்ரம்ப்!ஈரான் அதிகாரிகளுடன் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து உயர்மட்டச் சந்திப்புகளையும் அமெரிக்கா ரத்து செய்ததாகவும் ட்ரம்ப் அறிவித்துள்ளதால் பரபரப்பு.
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் பெரும் போர் வெடிக்கும்.." -கத்தார் எச்சரிக்கைதூதரக ரீதியிலான அமைதிப் பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு எட்டப்பட வேண்டும் என கத்தார் வலியுறுத்தல்.
Rail One செயலியில் டிஜிட்டல் முறையில் புக் செய்யப்படும் முன்பதிவில்லா டிக்கெட்களுக்கு 3% தள்ளுபடி அளிக்கும் திட்டம் ஜனவரி 14 முதல் ஜூலை 14 வரை அமலில் இருக்கும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தெரு நாய்களால் ஏற்படும் உயிரிழப்புகள் அல்லது காயங்களுக்கு, அந்தந்த உள்ளூர் நிர்வாகங்கள் மற்றும் நாய்களுக்கு உணவு வைப்பவர்களையே பொறுப்பாக்குவோம் என உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை. பொது இடங்களில் நாய்களுக்கு உணவு வைப்பவர்கள் அந்த நாய்களைத் தங்கள் வீட்டிற்கே அழைத்துச் சென்று வளர்க்க வேண்டும், இல்லையெனில் அவர்களும் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட நேரிடும் என்றும் கண்டிப்பு.
கூட்டணி விவகாரத்தில் தயக்கமோ, அழுத்தமோ, குழப்பமோ இல்லை. உரிய நேரத்தில் கூட்டணி தொடர்பாக அறிவிப்பு வரும்!”NDA-வுடன் கூட்டணி வைப்பதாக தகவல் வெளியான நிலையில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை
பெற்றோரைக் கைவிடும் அரசு ஊழியர்களின் 15% ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டு, அவர்களது பெற்றோருக்கு வழங்கப்படும் என தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கடும் எச்சரிக்கை!அப்படி செய்பவர்களை நாம்தான் வழிக்கு கொண்டு வர வேண்டும். தங்களின் ஊதியம் பெற்றோருக்கு உபயோகப்படாவிட்டால், நீங்கள் எப்படி இந்த சமூகத்துக்கு உபயோகப்படுவீர்கள்? எனவும் கேள்வி.
தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும்; சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு
தைத்திருநாளை வரவேற்கும் விதமாக, போகி பண்டிகை உற்சாகக் கொண்டாட்டம்; பழைய பொருட்களை வீதியில் போட்டு எரித்து கொண்டாடிய மக்கள்
"சாதி பேதமற்ற சமத்துவ பொங்கல் பொங்கட்டும்” - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து; போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க திமுகவினருக்கு அறிவுறுத்தல்
ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு சுத் தொகுப்பு விநியோகம் மேலும் ஒருநாள் நீட்டிப்பு; விடுபட்டவர்கள் இன்றும் பரிசுத்தொகுப்பை பெறலாம் என தமிழக அரசு அறிவிப்பு
ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு அண்ணாமலை என்ற தனியொருவரை மட்டும் அவமதிப்பதல்ல; ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதிப்பதாகும் சீமான் கண்டனம்
Tags: தமிழக செய்திகள்
