Breaking News

பொங்கல் முடிவதற்குள் பெண்களுக்கு இனிப்பான செய்தி வரும்: அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு

அட்மின் மீடியா
0

பொங்கல் கொண்டாட்டங்கள் முடிவதற்குள் பெண்களுக்கு இனிப்பான செய்தி வரும் என்று அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார். 

பொங்கல் முடிவதற்குள் இனிப்பான செய்தி வரும் என்று அமைச்சர் ஐ. பெரியசாமி கூறியிருப்பதால், மகளிர் உரிமைத்தொகை உயர்த்தப்பட இருக்கிறதா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.



தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக உள்ள ஐ. பெரியசாமி துறையின் கீழ் மகளிர் சுயஉதவி குழுக்கள், கடன் திட்டங்கள் உள்ளிட்ட பல துறைகள் வருகின்றன. எனவே, மூத்த அமைச்சராக உள்ள ஐ. பெரியசாமி தெரிவித்துள்ள இந்த தகவல் மகளிர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல்லில் நடந்த பொங்கல் விழாவில் அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், பொங்கல் பண்டிகை முடிவதற்குள் பெண்களுக்கு இனிப்பான செய்தியை முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார்.

அது 15-ஆம் தேதியாக இருக்கலாம், 16 ஆம் தேதியாகவும் இருக்கலாம். ஆனால் பொங்கல் கொண்டாட்டங்கள் முடிவதற்குள் பெண்களுக்கு ஒரு பரிசு காத்திருக்கிறது என பெரியசாமி தெரிவித்தார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback