Breaking News

பொதுமக்களுக்கு எச்சரிக்கை - மெரினாவில் குப்பை போட்டால் ரூ.5,000 அபராதம் சென்னை மாநகராட்சி கடும் எச்சரிக்கை

அட்மின் மீடியா
0

பொதுமக்களுக்கு எச்சரிக்கை - மெரினாவில் குப்பை போட்டால் ரூ.5,000 அபராதம் சென்னை மாநகராட்சி கடும் எச்சரிக்கை

சென்னையின் அடையாளமாக விளங்கும் மெரினா கடற்கரை சுற்றுலாப் பயணிகளின் முக்கிய ஈர்ப்பாக உள்ளது. இந்த கடற்கரையை சர்வதேச தரத்தில் பாதுகாக்க மாநகராட்சி பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தினமும் இயந்திரங்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் மூலம் மணற்பரப்பு சுத்தம் செய்யப்படுகிறது.

இருப்பினும், பொதுமக்கள் குப்பைகளை உரிய தொட்டிகளில் போடாமல் திறந்த வெளிகளில் வீசுவதால் கடற்கரை அழகு பாதிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு, சென்னை நகரின் நற்பெயருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. மெரினா மட்டுமல்ல, பெசன்ட் நகர், திருவான்மியூர் உள்ளிட்ட கடற்கரைகளிலும் இதே நிலை காணப்படுகிறது.



பொங்கல் பண்டிகையையொட்டி கடற்கரைகளுக்கு கூட்டம் அதிகரிக்கும் நிலையில், அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது. குப்பைகளை கண்டிப்பாக குப்பைத் தொட்டிகளில் மட்டும் போட வேண்டும். விதிகளை மீறி கடற்கரையில் குப்பை கொட்டுவோருக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback