Breaking News

பொங்கலுக்கு 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை - பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு Tamil Nadu Pongal Schools Holidays Announced

அட்மின் மீடியா
0

பொங்கலுக்கு 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை - பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு

Tamil Nadu Pongal Schools Holidays Announced

அனைத்து வகை பள்ளிகளுக்கும் பொங்கல் பண்டிகையை கொண்டாட 14.01.2026 முதல் 18.01.2026 வரை விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை வரும் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் கொண்டாடப்பட இருக்கிறது. அதற்காக அரசு விடுமுறையானது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் போகி பண்டிகை கொண்டாடப்படும் நாளான ஜனவரி 14 ஆம் தேதியும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

அதாவது நாளை மறுநாள் (ஜனவரி 14 ஆம் தேதி) முதல், 15, 16, 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 3 நாட்கள் விடுமுறையும், சனி, ஞாயிறு விடுமுறைகளான 2 நாட்களையும் சேர்த்து, தற்போது பொங்கல் பண்டிகைக்கு மொத்தம் 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருக்கிறது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback