2026 ஹஜ் பயணத்தில் காபா பள்ளிவாசலில் புகைப்படம் எடுக்க சவுதி அரேபியா தடை செய்ததா? உண்மை என்ன No Photography Ban at Holy Mosques for Hajj 2026
அட்மின் மீடியா
0
2026 ஹஜ் பயணத்தில் காபா பள்ளிவாசலில் புகைப்படம் எடுக்க சவுதி அரேபியா தடை செய்ததா? உண்மை என்ன No Photography Ban at Holy Mosques for Hajj 2026
சமூக வலைதளங்களில் பரவும் செய்தி:-
சவுதி அரசாங்கம் புதிய சட்டம் இயற்றி உள்ளது.
1. ஹாஜிகள் ஹரம் சரிபின் உள்ளேயே அல்லது வெளியில்லோ போட்டோக்கள் எடுக்க கூடாது.
2.இந்த செயலானது மற்ற அனைத்து ஹாஜிகளை வேதனை அடைய வைக்கிறது.
3.அப்படி மீறி போட்டோ எடுத்தால் போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தும்.
4.தண்டனையாக சவ்தி ரியால் 10,000 அபராதம் விதிக்கப்படும் (இந்திய ரூபாய் 54 2,40,800).
5.அபராதம் கட்ட தவறினால் அவர்களின் ஹஜ் ரத்து செய்யப்படும்.
உண்மை என்ன:-
2026 ஆம் ஆண்டு ஹஜ்ஜுக்காக மஸ்ஜித் அல்-ஹராம் மற்றும் மஸ்ஜித் அந்-நபவிக்குள் புகைப்படம் எடுப்பதற்கு சவுதி அதிகாரிகள் முழுமையான தடையை அமல்படுத்தியுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் முற்றிலும் தவறானவை.
2026 ஆம் ஆண்டு ஹஜ்ஜுக்கு மக்காவில் உள்ள பெரிய மசூதி மற்றும் மதீனாவில் உள்ள நபி மசூதிக்குள் புகைப்படம் எடுப்பதற்கு சவுதி அரேபியா (KSA) எந்த தடையையும் விதிக்கவில்லை .
சவுதி பத்திரிகை நிறுவனம் (SPA) , ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் மற்றும் இரண்டு புனித மசூதிகளின் பராமரிப்புக்கான பொது ஆணையம் ஆகியவையும் எந்த சுற்றறிக்கையையோ அல்லது உத்தரவையோ வெளியிடவில்லை
எனவே யாரும் பொய்யான செய்தியினை நம்பவேண்டாம்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி
