Breaking News

இன்றைய முக்கிய தலைப்பு செய்திகள் Today Headlines

அட்மின் மீடியா
0

  இன்றைய முக்கிய தலைப்பு செய்திகள் Today Headlines


இந்திய அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 51 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது தென்னாப்பிரிக்கா. அரைசதம் விளாசிய டி காக் ஆட்ட நாயகன் விருதை வென்றார். 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமனில் உள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் 2ம் கட்ட விரிவாக்கத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். விடியல் பயணத் திட்டம், தோழி விடுதிகள் போன்ற தமிழ்நாடு அரசின் திட்டங்களால் பலன் பெற்ற பெண்களின் கதைகளை வெளிப்படுத்தும் விதமாக 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

அருணாச்சலப் பிரதேசம் சக்லகம் பகுதியில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லாரி மலையிலிருந்து கீழே ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்தது. இதில் பயணித்த 22 தொழிலாளர்கழும் பலி என தகவல். மேலும், தற்போது மீட்புப் பணி நடைபெறுவதுடன், இதுவரை 13 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன

எஸ்.ஐ.ஆர். படிவத்தை சமர்ப்பிக்க கூடுதலாக 3 நாட்கள் அவகாசம். வரும் 14-ஆம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் என அறிவிப்பு. SIR படிவங்கள் பெறப்பட்ட பிறகு வரும் 19ம் தேதி தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

டிச., 3,4,5 தேதிகளில் இண்டிகோ விமானங்களில் டிக்கெட் பதிவு செய்து பயணிக்க முடியாமல் போனவர்களுக்கு டிக்கெட் கட்டணம் திருப்பியளிக்கப்படும்மேலும் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ரூ10,000 மதிப்புள்ள ட்ராவல் வவுச்சர்கள் வழங்கப்படும். இதனை அடுத்த12 மாதங்களுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்விமானங்கள் ரத்து செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு, விமானத்தின் நிறுத்த நேரத்தைப் பொறுத்து ரூ.5,000 முதல்ரூ.10,000 வரை இழப்பீடு வழங்கப்படும்.."

திண்டிவனம் அருகே கேணிப்பட்டில் ஆம்னி பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில் கமலக்கண்ணன் என்பவர் சம்பவ இடத்திலேயே பலி. பேருந்தில் இருந்த 15க்கும் மேற்பட்டோர் படுகாயம்.அவ்வழியாக சென்ற விழுப்புரம் ஆட்சியர் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது

ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாளை ஒட்டி சென்னை போயஸ்கார்டன் இல்லம் முன்பு அவரது ரசிகர்கள் கேட் வெட்டி கொண்டாடினர்

விஜய்யின் தலைமையை ஏற்பவர்கள் கூட்டணிக்கு வரலாம் என சென்னை, பனையூரில் நடந்த தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் நடத்த அனுமதி வழங்க கூடாது என கடிதம். பிரசாரம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள இடம் விஜயாபுரி அம்மன் கோயிலுக்கு சொந்தமானது என்பதால் அறநிலையத்துறையின் கீழ் வரும் கோயில் இடத்தில்  பிரசாரத்திற்கு அனுமதிக்க கூடாது”ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு கோயில் செயல் அலுவலர் தனலட்சுமி கடிதம்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 2 ஊராட்சிகள் புதியதாக உருவாக்கம்; மொத்த ஊராட்சிகளின் எண்ணிக்கை 308 ஆனது.ஆர்.கோம்பை ஊராட்சியில் இருந்து 17 கிராமங்களை பிரித்து சின்னழகுநாயக்கனூர் ஊராட்சி உருவாக்கப்பட்டுள்ளது; சித்தரேவு ஊராட்சியில் இருந்து 9 கிராமங்களை பிரித்து சிங்காரக்கோட்டை ஊராட்சி புதியதாக உருவாக்கம்

சென்னையில் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வழங்கும் சிறப்பு முகாம் இன்று (டிச.13) முதல் 3 நாட்களுக்கு 8 இடங்களில் நடத்தப்பட உள்ளது - சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சபரிமலையில் மண்டல பூஜை தரிசனத்திற்கு இன்று(டிச.11) மாலை 5 மணி முதல் ஆன்லைனில் முன்பதிவு. சபரிமலையில் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது; 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் பக்தர்கள் தரிசனத்துக்கு ஆன்லைன் முன் பதிவு மாலை 5 மணிக்கு தொடக்கம்; sabarimalaonline.org என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம்; டிச. 26இல் 30,000 பேர், 27 ஆம் தேதி 35,000 பேருக்கு அனுமதி - ஸ்பாட் புக்கிங்கில் தலா 5,000 பேருக்கே அனுமதி

தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டால் தர்ணா போராட்டம் நடத்தப்படும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கைசமையல் கத்தி உள்ளிட்டவைகளுடன் வீதிக்கு போராட வருமாறும் அழைப்பு

Gen Z போராட்டத்தால் ஆட்சி கலைக்கப்பட்ட வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்.12-ம் தேதி பொது தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு. தற்போது முஹம்மத் யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு இயங்கிவருவது, மாணவர்கள் போராட்டத்திற்கு பின் நடைபெறும் தேர்தல் என்பதால் உலக அரங்கில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

முன்னாள் முதலமைச்சர் காமராஜர் குறித்து அவதூறு கருத்துகள் தெரிவித்த யூடியூபர் முக்தார் அகமதுவை கைது செய்ய கோரி, தமிழக நீதிக் கட்சியின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பாஸ்கர் தலைமையில், ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது

மாவட்ட நீதிபதி பணியிடை நீக்கம்காஞ்சிபுரம் DSP சங்கர் கணேஷை சிறையில் அடைக்க உத்தரவிட்ட மாவட்ட நீதிபதி பணியிடை நீக்கம்காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி செம்மலை பணியிடை நீக்கம் செய்து உயர்நீதிமன்ற பதிவாளர் உத்தரவு.செம்மல் தற்போது அறியலூர் மாவட்டத்தில் நீதிபதியாக பணியாற்றி வரும் நிலையில் பணியிடை நீக்கம்

பாமக போராட்டத்திற்கு தவெகவிற்கு அழைப்புபாமக நடத்தக்கூடிய சாதிவாரி கணக்கெடுப்பு போராட்டத்திற்கு தவெகவிற்கு நேரில் அழைப்புபாமக சார்பாக வழக்கறிஞர் பாலு, தவெக பொதுச்செயலாளர் ஆனந்திற்கு அழைப்பு கடிதம்.

கோல்டு கார்டு விசாவை அறிமுகப்படுத்தினார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்; $.10 லட்சம் மதிப்புள்ள இந்த கோல்டு கார்டு விசா, அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கி, வேலை பார்க்க அனுமதிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

திருவொற்றியூரில் நடைபெற்ற கொலை வழக்கு தொடர்பாக எண்ணூர் சுனாமி குடியிருப்பில் பதுங்கி இருந்த ரவுடி விக்கியை பிடிக்க போலீஸ் முயற்சி.பிடிக்க வந்த உதவி ஆய்வாளர் நவீன் மீது பெட்ரோல் குண்டு வீசி தப்ப முயன்ற ரவுடி விக்கியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்; காயமடைந்த விக்கி ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மேலும் சரிவு. ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு 90 ரூபாய் 33 காசுகளாகக் குறைந்தது..

இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாவதில் இழுபறி நீடிப்பதால் ரூபாய் மதிப்பு சரிகிறது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 2ஆம் கட்ட விரிவாக்க திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' என்ற பெயரில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மகளிர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம். 38 மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு.

2026ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்றத் தேர்தல் பணிகளில் தேர்தல் ஆணையம் மும்முரம். ஆட்சியர் அலுவலகங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களை பரிசோதிக்கும் பணிகள் தொடக்கம்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback