இன்றைய முக்கிய தலைப்பு செய்திகள் Today Headlines News
இன்றைய முக்கிய தலைப்பு செய்திகள் Today Headlines News
திமுகவின் என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி' பரப்புரை தொடக்கம். எந்த ஷா வந்தாலும் கருப்பு, சிவப்புப் படை தக்க பாடம் புகட்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி.
SIR கணக்கெடுப்பு படிவங்களை அளிக்க இன்று கடைசி நாள். தமிழ்நாட்டில் இதுவரை 6.38 கோடி படிவங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், 70 லட்சம் வாக்காளர்களை நீக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்.16ம் தேதி வெளியாகிறது வரைவு வாக்காளர் பட்டியல். வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் வரும் 16-ம் தேதி முதல் விண்ணப்பிக்க ஏற்பாடு.
வாக்குத் திருட்டு தொடர்பான அமித் ஷாவின் பேச்சை கண்டித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு. ஒரு கேள்விக்கு கூட பதில் அளிக்கவில்லை என ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
இன்று (டிச.11) வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கிடையாது; தற்செயல் விடுப்பு எடுக்க அனுமதியில்லை. 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் (டிட்டோஜாக் அமைப்பு ) அடையாள வேலை நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
காசா அமைதித் திட்டத்தை முன்கூட்டியே செயல்படுத்துவதற்கு ஆதரவு : பிரதமர் மோடி செல்போனில் பேசிய இஸ்ரேலிய பிரதமர்
ஆதார் பெயர் மாற்றத்திற்கான ஆவணமாக இனி பான் கார்டை ஏற்க முடியாது என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவிப்பு - இந்திய பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ரேசன் கார்டு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவற்றை ஆவணமாக வழங்கலாம்.
சென்னையில் 9வது நாளாக இன்டிகோ நிறுவனத்தின் 70 விமான சேவைகள் ரத்து - பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பாக விமான போக்குவரத்து துறை துணை செயலாளர் அம்புஜ் சர்மா ஆய்வு
நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாமல் இருந்தால், தண்டனை விதிப்பதை தவிர வேறு வழியில்லை என உயர்நீதிமன்றம் எச்சரிக்கை - உத்தரவை நிறைவேற்றாமல் இருந்ததற்கு, தேர்தல் பணிகளை காரணமாக கூறக்கூடாது என நீதிபதிகள் கண்டனம்
சென்னையில் 23வது சர்வதேச திரைப்பட விழா இன்று துவக்கம்
தமிழ்நாடு என்றைக்குமே ஆணவம் பிடித்த டெல்லிக்கு Out of Control தான் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் X தளத்தில் பதிவு
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 2வது டி20 போட்டி இன்று நியூ சண்டிகரில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே இன்று சண்டிகரில் இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி - கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், பாதுகாப்புக் -காகவும் 3 ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபடுவார்கள் என அறிவிப்பு
புதுச்சேரியில் பச்சரிசி, நாட்டு சர்க்கரை உட்பட ரூ.750 மதிப்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு - முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை - ஆஸ்திரேலியாவில் அமல்
சென்னையில் நடைபெற்ற உலக கோப்பை ஜூனியர் ஹாக்கிப் போட்டியில் இந்தியா வெண்கலம் வென்றது.. 3ஆவது இடத்திற்கு நடைபெற்ற போட்டியில் 4 - 2 என்ற கோல் கணக்கில் வாகை சூடியது
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு ஆதரவாக பேசிய அமித் ஷா. தீபம் ஏற்றக்கூறிய நீதிபதியை பதவி நீக்க கோருவதா? என்று கூறியதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு.
பொறுப்பு டிஜிபியாக லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் அபய்குமார் சிங் நியமனம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு. வெங்கட்ராமன் 15 நாட்கள் மருத்துவ ஓய்வில் உள்ளதால் பொறுப்பு டிஜிபியாக அபய்குமார் சிங் நியமனம்
2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை... தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து 15 முக்கிய துறையினருடன் கலந்துரையாடல்...
உங்கள் பணம், உங்கள் உரிமை இயக்கத்தில் பங்கேற்க நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு -உங்கள் குடும்பத்தினர் யாராவது உரிமை கோராமல் விட்டிருக்கிறார்களா என சரி பார்த்து அதை தற்போது பெற்றுக் கொள்ளலாம்
புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க விஜய் முயற்சி என பா.ஜ.க.அமைச்சர் நமசிவாயம் குற்றச்சாட்டு - வரும் தேர்தலில் பா.ஜ.கவுடன் கூட்டணி தொடருமா என்ற கேள்விக்கு பதிலளிக்க முதலமைச்சர் ரங்கசாமி மறுப்பு
தவெக மாவட்டச் செயலர்கள், முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் விஜய்... சென்னை பனையூரில் இன்று நடக்கும் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு...
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் 6 நாட்களுக்கு மிதமான மழை... சென்னையில் ஒருசில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு...
மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் சூழல் குறித்து பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு... பிராந்தியத்தில் அமைதியை மீட்டெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவு அளிக்கும் என பிரதமர் மோடி உறுதி...
Tags: தமிழக செய்திகள்
