SIR படிவங்களுக்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு... டிச.19ல் வரைவு வாக்காளர் பட்டியல்!
SIR படிவங்களுக்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு... டிச.19ல் வரைவு வாக்காளர் பட்டியல்!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த நவம்பர் மாதம் 4-ஆம் தேதி தொடங்கிய வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகளுக்கான (SIR) பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களைத் திரும்ப ஒப்படைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (டிசம்பர் 14) நிறைவடைகிறது.
முன்னதாக பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை டிசம்பர் 4ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவித்திருந்தது. அதன்பிறகு 7 நாட்களுக்குக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களுக்குக் கூடுதலாக 3 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த நீட்டிக்கப்பட்ட அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதால், இன்றைக்குள் படிவத்தைப் பூர்த்தி செய்து வழங்காதவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் தெளிவாகத் தெரிவித்துள்ளது. இதையடுத்து, இந்தச் சிறப்புத் திருத்தப் பணிகள் முடிவடைந்த பிறகு, தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வரும் டிசம்பர் 19-ஆம் தேதி வெளியாகும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
SIR வாக்காளர் பட்டியல் 2002 ல் உங்கள் பெயர் இருக்கா சரி பார்ப்பது எப்படி இங்கு கிளிக் செய்யவும்
https://www.adminmedia.in/2025/11/sir-2002-direct-link-tamil-nadu-voter.html
எஸ்.ஐ.ஆர். படிவம் பூர்த்தி செய்வது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் முழு தகவல் இங்கு கிளிக் செய்யவும்
https://www.adminmedia.in/2025/11/how-to-fill-voters-enumeration-form.html
வாக்காளர் கணக்கீட்டு படிவம் ஆன்லைன் மூலம் சமர்ப்பிப்பது எப்படி இங்கு கிளிக் செய்யவும்
https://www.adminmedia.in/2025/11/sir-voters-enumeration-form-online-apply.html
Tags: தமிழக செய்திகள்
