NEWS HEADLINES TODAY இன்றைய முக்கிய தலைப்பு செய்திகள்
NEWS HEADLINES TODAY இன்றைய முக்கிய தலைப்பு செய்திகள்
பிறக்கின்ற புத்தாண்டு 2026. அது, திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்திடும் ஆண்டு! இருளில் பிறக்கும் புத்தாண்டை விடியச் செய்யும் உதயசூரியன் போல, தமிழ்நாட்டின் விடியல் வெளிச்சமாகக் கழக ஆட்சி தொடர்ந்திடும் .தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கை மிகுந்த புத்தாண்டாக 2026ஆம் ஆண்டு நிச்சயமாக அமையும். உடன்பிறப்புகளுக்கும் அனைத்து மக்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்
ஆண்டிபயாடிக் மாத்திரை அட்டைகளின் பின்பக்கம் சிவப்புப் பட்டை இருந்தால் மட்டுமே வாங்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
தமிழ்நாட்டில் 9 IAS அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு. இளைஞர் நலன், விளையாட்டுத்துறை செயலராக சத்யபிரத சாகு, கூட்டுறவுத்துறை செயலாளராக கே.சு.பழனிசாமி,அரசு பணியாளர் தேர்வாணைய இயக்குநராக பானோத் ம்ருகேந்தர் லால், ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆணையராக மலர்விழி ஆகியோர் நியமனம்!
தமிழ்நாட்டில் 70 ஐபிஎஸ் அதிகாரிகளை பணி உயர்வு, பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு! தமிழ்நாட்டில் 70 ஐபிஎஸ் அதிகாரிகளை பணி உயர்வு, பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு. சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்ட 3 பேருக்கு டிஜிபியாக பதவி உயர்வு! ஐ.ஜி-க்கள் அன்பு, பிரேம் ஆனந்த் சின்ஹா, செந்தில்குமார், அனிஷா ஹூசைன், நஜ்மல் ஹோடா, மகேஷ்குமார் ரத்தோட், தீபக் எம்.தாமோர் ஆகியோருக்கு ஏடிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஆவடி ஆணையர் சங்கர், தாம்பரம் ஆணையர் தினேஷ் மோதக் ஆகியோருக்கு ஏடிஜிபி-யாக பதிவு உயர்வு அளிக்கப்பட்டு, இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதால், டோக்கன் கொடுக்கும் பணியை ஜன. 3ம் தேதி தொடங்கத் திட்டம்
2ம் தேதிக்குள் டோக்கன் அச்சடிக்கும் பணியை நிறைவு செய்து தயார் நிலையில் வைத்திருக்க கூட்டுறவுத்துறை சுற்றறிக்கை
தமிழகத்தில் அனைத்து EV-க்களுக்கும் மோட்டார் வாகன வரியிலிருந்து 100% விலக்கு 2027, டிச.31 வரை தொடரும் என தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தகவல்
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 7,32,367 பேர் விண்ணப்பம் - பெயர் நீக்கம் செய்ய கோரி 9,450 பேர் விண்ணபித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல்
ஜப்பானை பின்னுக்குத் தள்ளி உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேற்றம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.375 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு
2026-இல் இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்படலாம் என அமெரிக்க ஆய்வு நிறுவனம் கணிப்பு இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டி எச்சரிக்கை
இலங்கைக்கு எதிரான மகளிர் T20 கிரிக்கெட் தொடரை 5-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
சென்னையில் இன்று நள்ளிரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு நிகழ்ச்சிகளை நடத்தவே கூடாது என மாமல்லபுரம், ECR பகுதிகளில் உள்ள தனியார் விடுதி நிர்வாகிகளுக்கு போலீசார் அறிவுறுத்தல்
சென்னையில் இன்று மாலை முதல் நாளை வரை மெரினா, சாந்தோம், நீலாங்கரை, உள்ளிட்ட கடற்கரைகளில் பொதுமக்கள் கடலில் குளிக்கவோ, இறங்கி விளையாடவோ அனுமதி மறுப்பு
திருத்தணி அருகே வடமாநில இளைஞர் சிறுவர்களால் தாக்கப்பட்ட சம்பவத்தில், வடமாநிலத்தவர் என்பதால் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுவது தவறான தகவல் என ஐஜி அஸ்ரா கார்க் விளக்கம்
சென்னை ரிப்பன் மாளிகை முன்பு இரவிலும் தரையில் அமர்ந்து போராட்டத்தைத் தொடர்ந்த தூய்மை பணியாளர்கள் - வாழ்வாதாரத்துக்கு வழி சொல்லும் வரை போராட்டம் தொடரும் எனக் கூறியவர்கள் கைது
ம.தி.மு.க. எம்.ஏல்.ஏவுக்கு 2 ஆண்டுகள் சிறை .காசோலை மோசடி வழக்கில் எம்.ஏல்.ஏ. சதன் திருமலை குமாருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை என சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தீர்ப்பு. ம.தி.மு.க.வைச் சேர்ந்த வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. சதன் திருமலை குமார், தனியார் நிதி நிறுவனத்தில் 2016ல் ரூ.1 கோடி கடன் பெற்றார்.கடன் தொகைக்கு அளித்த காசோலையை வங்கியில் செலுத்திய போது பணம் இல்லை என திரும்பியதால் நியூ லிங் ஓவர்சீஸ் நிதி நிறுவனத்தின் இயக்குநர் வழக்கு. ஒரு கோடி ரூபாயை 2 மாதங்களுக்குள் திரும்ப கொடுக்க வேண்டும்; இல்லை என்றால் மேலும் மூன்று மாதங்கள் சிறை.எம்.ஏல்.ஏ. சதன் திருமலை குமார் மேல் முறையீடு செய்யும் வகையில் 2 மாதம் தண்டனை நிறுத்திவைப்பு.
உலகின் 4ஆவது பெரிய பொருளாதார நாடாக முன்னேறி வரலாற்று சாதனை படைத்தது இந்தியா. 4.18 டிரில்லியன் டாலர் மதிப்புடன் ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளியது.
சென்னையில் இன்று மாலைமுதல் நாளை வரை கடற்கரைகளில் குளிக்கவோ, இறங்கவோ தடை. கடற்கரைக்கு பொதுமக்கள் செல்வதை தடுக்க தடுப்புகள் அமைப்பு.
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர், பாலவாக்கம் கடற்கரைகள் உள்ளிட்ட இடங்களில் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன
புதுச்சேரிக்கு நம்பர் பிளேட் இல்லாமல் வரும் வாகனங்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்படும். மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு இ-சேவை மற்றும் ஆதார் மையங்கள் இன்றும் நாளையும் செயல்படாது. மென்பொருள் பராமரிப்பு, தணிக்கை பணிகள் காரணமாக 2 நாட்கள் இயங்காது என அறிவிப்பு.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு. வரும் 3ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிப்பு.
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள். 19 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என அறிவிப்பு.
தி.மு.க தேர்தல் அறிக்கைக்காக மக்களிடம் கருத்து கேட்க புதிய செயலி. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதிய செயலியை இன்று அறிமுகம் செய்கிறார்.
கரூர் சம்பவம் தொடர்பாக த.வெ.க நிர்வாகிகளிடம் 2 நாட்களாக 15 மணி நேரம் விசாரணை. 3வது நாளாக இன்றும் விசாரணைக்கு ஆஜராக சிபிஐ உத்தரவு.
திருத்தணி அருகே வடமாநில இளைஞரை தாக்கியவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு. பாதிக்கப்பட்டவர் விருப்பத்தின் பேரில் சொந்த ஊர் சென்றதாகவும் ஐஜி அஸ்ரா விளக்கம்.
Tags: தமிழக செய்திகள்
