இன்றைய முக்கிய செய்திகள் headlines today tamil
இன்றைய முக்கிய செய்திகள் headlines today tamil
ஈரோடு - பெருந்துறையில் இன்று (டிச.18) காலை 11 மணிக்கு மக்கள் சந்திப்பு பரப்புரை நிகழ்ச்சியை நடத்துகிறார் தவெக தலைவர் விஜய்! கரூர் கூட்ட நெரிசலுக்குப் பிறகு தமிழ்நாட்டில் தவெக நிர்வாகி செங்கோட்டையனின் ஏற்பாட்டில், விஜய் தனது முதல் பொதுவெளி நிகழ்ச்சியை நடத்துகிறார்.
ஈரோட்டில் நடைபெற உள்ள தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி குறித்து, அக்கட்சியின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேட்டி
ஒன்றிய அரசின் விக்சித் பாரத் மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு. மக்களவையில் கனிமொழி, சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் கடும் விமர்சனம்.
100 நாள் வேலை திட்டம் மாற்றப்பட்டதை கண்டித்து நாடு தழுவிய அளவில் நாளை போராட்டம். அகில இந்திய கிராமப்புற வேலைத் திட்ட தொழிலாளர் கூட்டமைப்பு அறிவிப்பு.
ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்ட பெயரை மாற்ற வேண்டாம் என்று பழனிசாமி வலியுறுத்தல். வேலை நாட்களை 125ஆக உயர்த்துவதற்கு வரவேற்பு.
பொது சிவில், கட்டாய மதமாற்றத் தடைச் சட்ட மசோதாக்களை திருப்பி அனுப்பிய உத்தரகாண்ட் ஆளுநர். பா.ஜ.க. அரசுக்கு பின்னடைவு.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே ஆன 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கைவிடப்பட்டது. கடும் பனிமூட்டத்தால் ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி ரத்து.
திருத்தணி அரசு பள்ளியில் கைப்பிடி சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 7ம் வகுப்பு மாணவர் மோஹித்தின் தந்தைக்கு அரசுப் பணி. ரூ.5 லட்சம் இழப்பீடு மற்றும் பணி ஆணையை வழங்கினார் அமைச்சர் நாசர்!
பிரதமர் மோடியின் எத்தியோப்பியா சுற்றுப்பயணம் நிறைவு ஓமன் சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு
காலநிலை மாற்றம் தொடர்பான திமுக அரசின் செயல்பாடுகள் இந்தியாவுக்கு Blueprint - முதலமைச்சர் பெருமிதம்
திண்டுக்கல் - சபரிமலை புதிய ரயில் பாதை அமைப்பது குறித்து ஆய்வு - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
அணுசக்தி மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் - மின் தேவையை பூர்த்தி செய்ய மசோதா நிறைவேற்றம் என விளக்கம்
ஈரோட்டில் இன்று தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி - யார் வேண்டுமானாலும் செல்லலாம் என செங்கோட்டையன் பேட்டி
மதுரை ரயில் நிலையம் அருகே எல்.ஐ.சி கட்டிடத்தின் 2வது தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் முதுநிலை மேலாளர் கல்யாணி நம்பி (55) உயிரிழப்பு தீ காயங்களுடன் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி; கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர்
விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படத்தின் 2வது பாடல் இன்று வெளியாகிறது - வீடியோ வெளியிட்டு படக்குழு அறிவிப்பு
பொங்கலுக்கு பிறகு 60 நாட்கள் புதுச்சேரி முழுவதும் பாதயாத்திரை சென்று மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளோம்; பாதயாத்திரை தொடங்கும் முன் தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளோம். லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின்
இந்தியப் பொருள்கள் மீதான அமெரிக்காவின் வரிவிதிப்பினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்ய வேண்டும்” அமெரிக்காவின் வரி விதிப்பால் தமிழ்நாட்டில், ஏற்றுமதி துறைகளில் நெருக்கடி அதிகரித்து வருகிறது; தமிழ்நாட்டில் ஏற்றுமதி துறைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு, நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரீக்குடன் இருதரப்பு உறவுகள் பற்றி இன்று விரிவாக பேச்சு நடத்துகிறார் பிரதமர் மோடி - வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, பாதுகாப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு குறித்து ஆலோசிக்க வாய்ப்பு
சென்னை வாசிகளிடம் வரவேற்பு உள்ளதால் மேலும் 600 மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்பப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு போக்குவரத்து நெரிசலை குறைக்க பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தல்
டெல்லியில் காற்று மாசுவை குறைக்கும் நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல் - பிஎஸ்6க்கு கீழ் உள்ள வாகனங்கள் நுழைய தடை, அரசு மற்றும் தனியார் நிறுவன பணியாளர்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய உத்தரவு
டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு எதிரொலியாக இன்று முதல் அனைத்து அரசு, தனியார் நிறுவனங்களில் 50% பணியாளர்களுக்கு மட்டுமே அலுவலகம் வர அறிவுறுத்தல். காற்று மாசு அதிகரித்துவரும் நிலையில், விதிகளை மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அரசு எச்சரிக்கை
தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும்; நாளை முதல் 21ஆம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரியில் லேசான பனிமூட்டம் காணப்படும் என வானிலை மையம் கணிப்பு
ஊரக வேலை திட்டத்திற்கு மாநில அரசு பங்களிக்க வேண்டும் என்பதில் அதிமுகவின் நிலைப்பாடு என்ன?; குனிந்து கும்பிடு போடும் கட்சிக்கு அண்ணா திமுக என்ற பெயர் எதற்கு என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
பிஎஸ் 3 அல்லது அதற்கு முந்தைய வாகனங்கள் பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுங்கள்; காற்று மாசு தொடர்பான வழக்கில் டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் மசோதா; மக்களவையில் நீண்ட |விவாதத்துக்கு பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றம்
ஜனவரி இரண்டாவது வாரத்தில் பிரதமர் மோடி அல்லது அமித் ஷா புதுக்கோட்டை வருகை; தனது பரப்புரை பயண நிறைவுக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக நயினார் நாகேந்திரன் பேட்டி
எத்தியோப்பியா பயணத்தை முடித்துக் கொண்டு ஓமன் சென்ற பிரதமர் மோடி; மஸ்கட் நகரில் இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு இந்தியா- ஓமன் இடையே நடைமுறைக்கு வரும் தடையற்ற வர்த்தகம்; அரசுமுறைப் பயணமாக ஓமன் சென்றுள்ள பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்தாகிறது ஒப்பந்தம்|
அன்புமணி மீதான ஊழல் வழக்கில் சிபிஐ விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்; பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற நிர்வாகக் குழு கூட்டத்தில் தீர்மானம்
Tags: தமிழக செய்திகள்
