எச்சரிக்கை Happy New Year.apk என்று வரும் மெசேஜ்களை கிளிக் செய்யாதீர்கள்
அட்மின் மீடியா
0
புத்தாண்டு: வாட்ஸ்ஆப் ஸ்பேம் எச்சரிக்கை..
2026 புத்தாண்டு வாழ்த்து என்ற பெயரில் WhatsApp-ல் APK பைல்களுடன் வரும் மெசேஜ்களை பயனர்கள் ஓப்பன் செய்ய வேண்டாம்.
Happy_New_Year.apk என்ற பெயரில் அனுப்பப்படும் மெசேஜ்களை ஒப்பன் செய்தால் உங்களது தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது.
நியூ இயர் வாட்ஸ்அப் மெசேஜ் வாழ்த்துக்கள் மூலமாக மோசடி நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. இது சமீப காலங்களில் அதிகரித்து வரும் online scam வகைகளில் ஒன்று என்கின்றனர் அதிகாரிகள்.Advertisementஎப்படி இந்த மோசடிகள் நடக்கிறது?லிங்க் உள்ள வாழ்த்து மெசேஜ் நமக்கு வரும். “
Happy New Year 🎉 – இதை கிளிக் செய்யவும் என இருக்கும். அந்த லிங்க்கை கிளிக் செய்தால் → போலி வெப்சைட் திறக்கும். அதில் Gift / Cash Offer“New Year Gift ₹999 – claim now” (தொகைகள் மாறுபடலாம் ) என அறிவித்து அதை அனுப்ப நமது ஏடிஎம் (UPI / Card Details)தகவல்கள் கேட்கப்படும்.APK / App Download செய்து விட்டால் அவ்வளவுதான். அதாவது அவர்கள் அனுப்பும் “New Year Special App” Download செய்தால் உடனடியாக உங்கள் போன் ஹேக் (Phone Hack / Data Theft) செய்து தகவல்கள் திருடப்படும் வாய்ப்பு உண்டு.
அடுத்து WhatsApp Hack வழிமுறையில் OTP கேட்டு உங்கள் WhatsApp account கைப்பற்றப்படும்.Forward Scam வழியாக“10 பேருக்கு அனுப்பினால் gift” என நமக்குத் தெரிந்தே டேட்டாக்கள் அவர்களுக்கு செல்லும்.
எனவே அது போல் வரும் மெசஜ்களை கிளிக் செய்யாதீர்கள்
Tags: FACT CHECK