கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு christmas new year special trains
கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு christmas new year special trains
நாகர்கோவில் சந்திப்பு - மட்கான் சிறப்பு ரயில் (ரயில் எண் 06083)
செவ்வாய்க்கிழமைகளில் (டிசம்பர் 23 மற்றும் 30, 2025 மற்றும் ஜனவரி 6, 2026) காலை 11.40 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 8.50 மணிக்கு மட்கான் சந்திப்பு நிலையத்தை வந்தடையும்.
மட்கான்-நாகர்கோவில் சந்திப்பு சிறப்பு ரயில் (ரயில் எண் 06084)
புதன்கிழமைகளில் (டிசம்பர் 24 மற்றும் 31, 2025 மற்றும் ஜனவரி 7, 2026) காலை 10.15 மணிக்கு மட்கான் சந்திப்பிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 11 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பை அடைந்துவிடும்.
ஹூப்ளி – திருவனந்தபுரம் சிறப்பு ரயில் (07361)
டிசம்பர் 23 (செவ்வாய்க்கிழமை) அன்று ஹூப்ளியில் இருந்து காலை 6.55 மணிக்குக் கிளம்புகிறது.
இது பங்காருபேட்டை வழியாக வந்து, இரவு 9.30 மணிக்குச் சேலம் வந்தடையும். மூன்று நிமிடங்களுக்குப் பிறகு (9.33 மணிக்குப்) புறப்பட்டு, ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாகச் சென்று மறுநாள் காலை 10.30 மணிக்குத் திருவனந்தபுரம் சென்றடையும்.
திருவனந்தபுரம் – எஸ்.எம்.வி.டி. பெங்களூரு சிறப்பு ரயில் (07362)
திருவனந்தபுரத்தில் இருந்து டிசம்பர் 24 (புதன்கிழமை) மதியம் 12.40 மணிக்குக் கிளம்பும் இந்த ரயில், போத்தனூர், திருப்பூர், ஈரோடு வழியாகச் சென்று மறுநாள் நள்ளிரவு 12.17 மணிக்குச் சேலம் வந்தடையும். இங்கிருந்து 12.20 மணிக்குக் கிளம்பி, காலை 5.50 மணிக்கு எஸ்.எம்.வி.டி. பெங்களூருவைச் சென்றடையும்.
எஸ்.எம்.வி.டி. பெங்களூரு – கொல்லம் சிறப்பு ரயில் (06561)
எஸ்.எம்.வி.டி. பெங்களூருவில் இருந்து டிசம்பர் 27 (சனிக்கிழமை) மதியம் 3 மணிக்குக் கிளம்பும் இந்தச் சிறப்பு ரயில், பங்காருபேட்டை வழியாக வந்து இரவு 8 மணிக்குச் சேலத்தை அடையும். அங்கிருந்து 8.03 மணிக்குக் கிளம்பி, ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாகச் சென்று மறுநாள் காலை 7.25 மணிக்குக் கொல்லம் சென்றடையும்.
சார்லப்பள்ளி-கொல்லம் சிறப்பு ரயில் (ரயில் எண் 07119)
புதன்கிழமைகளில் (டிசம்பர் 17 மற்றும் 31) காலை 10:30 மணிக்கு சார்லப்பள்ளியில் இருந்து புறப்பட்டு மறுநாள் இரவு 10 மணிக்கு கொல்லத்தை அடையும்.
கொல்லம்-சார்லப்பள்ளி சிறப்பு ரயில் (ரயில் எண் 07120)
வெள்ளிக்கிழமைகளில் (டிசம்பர் 19, 2025 மற்றும் ஜனவரி 2, 2026) அதிகாலை 2:30 மணிக்கு கொல்லம் சந்திப்பு நிலையத்திலிருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 1:20 மணிக்கு சார்லப்பள்ளியை அடையும்.
கொல்லம் – ஹூப்ளி சிறப்பு ரயில் (06562)
கொல்லத்தில் இருந்து டிசம்பர் 28 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.40 மணிக்குக் கிளம்பும் இந்த ரயில், போத்தனூர், திருப்பூர், ஈரோடு வழியாக இரவு 9.27 மணிக்குச் சேலம் வந்து சேரும். மூன்று நிமிடங்கள் நின்று 9.30 மணிக்குக் கிளம்பும் இந்த ரயில், பங்காருபேட்டை வழியாகச் சென்று மறுநாள் காலை 10.30 மணிக்கு ஹூப்ளியை அடைந்து பயணத்தை நிறைவு செய்யும்.
மைசூரு-தூத்துக்குடி சிறப்பு ரயில் (ரயில் எண் 06283)
டிசம்பர் 23 மற்றும் 27 ஆம் தேதிகளில் இயக்கப்படும். மைசூருவிலிருந்து மாலை 6.35 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடியை அடையும்.
தூத்துக்குடி-மைசூரு சிறப்பு ரயில் (ரயில் எண் 06284),
டிசம்பர் 24 மற்றும் 28 ஆம் தேதிகளில் இயக்கப்படும். தூத்துக்குடியிலிருந்து பிற்பகல் 2 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு மைசூருவை வந்தடையும்.
மங்களூர் சந்திப்பு - திருவனந்தபுரம் சிறப்பு ரயில் (06041)
ஞாயிற்றுக்கிழமைகளில் (டிசம்பர் 7, 14, 21, மற்றும் 28, 2025, மற்றும் ஜனவரி 4, 11 மற்றும் 18, 2026) மாலை 6 மணிக்கு மங்களூர் சந்திப்பிலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 6.30 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு வந்தடையும்.
திருவனந்தபுரம் வடக்கு - மங்களூர் சந்திப்பு வாராந்திர சிறப்பு ரயில் (06042)
திருவனந்தபுரத்தில் இருந்து திங்கள்கிழமைகளில் (டிசம்பர் 8, 15, மற்றும் 22, 2025, மற்றும் ஜனவரி 5, 12 மற்றும் 19, 2026) காலை 8.30 மணிக்கு புறப்பட்டு, அதே நாளில் இரவு 8.30 மணிக்கு மங்களூர் சந்திப்பை அடைந்துவிடும்.
சார்ல பள்ளி - மங்களூரு ஜங்ஷன் சிறப்பு இரயில் எண் (07267):
டிசம்பர் 24-ஆம் தேதி சார்லபள்ளியில் இருந்து இரவு 11.30 மணிக்குக் கிளம்பும். ஜோலார்பேட்டை வழியாக மறுநாள் காலை 8.23 மணிக்குச் சேலம் வந்து, 8.25 மணிக்கு ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக டிசம்பர் 26-ஆம் தேதி காலை 6.55 மணிக்கு மங்களூரு ஜங்ஷனைச் சென்றடையும்.
மறு மார்க்கம் (07268): மங்களூரு ஜங்ஷனில் இருந்து டிசம்பர் 26-ஆம் தேதி காலை 9.55 மணிக்குக் கிளம்பி, ஈரோடு, திருப்பூர் வழியாக மறுநாள் காலை 8.40 மணிக்குச் சேலம் வந்து, ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக மாலை 5 மணிக்குச் சார்லபள்ளியைச் சென்றடையும்.
சார்லபள்ளி - மங்களூரு சென்ட்ரல் சிறப்பு இரயில் எண் (07269): இந்த இரயில் டிசம்பர் 28-ஆம் தேதி சார்லபள்ளியில் இருந்து இரவு 11.30 மணிக்குக் கிளம்பும். ஜோலார்பேட்டை வழியாக மறுநாள் காலை 8.23 மணிக்குச் சேலம் வந்து, 8.25 மணிக்கு ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக டிசம்பர் 30-ஆம் தேதி காலை 6.55 மணிக்கு மங்களூரு சென்ட்ரலைச் சென்றடையும்.
மறு மார்க்கம் (07270): மங்களூரு சென்ட்ரலில் இருந்து டிசம்பர் 30-ஆம் தேதி காலை 9.55 மணிக்குக் கிளம்பி, போத்தனூர், ஈரோடு, ஜோலார்பேட்டை வழியாக மறுநாள் மாலை 5 மணிக்குச் சார்லபள்ளியைச் சென்றடையும்.
தாம்பரம் - நெல்லை சிறப்பு ரயில்
நெல்லையில் இருந்து வருகிற 28, ஜனவரி 4 ஆகிய தேதிகளில் இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரெயில்(வண்டி எண்.06166), கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு வழியாக மறுநாள் காலை 10.55 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து வருகிற 29, ஜனவரி 5 ஆகிய தேதிகளில் மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் சிறப்பு ரெயில்(06165), மேற்கண்ட வழித்தடம் வழியாக மறுநாள் அதிகாலை 4 மணிக்கு நெல்லை சென்றடையும்.
ஈரோடு - நாகர் கோயில் சிறப்பு ரயில்:-
ஈரோட்டில் இருந்து நாளை 23 ம்தேதி மற்றும் 30-ந்தேதி மாலை 4 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06025), மறுநாள் மதியம் 1.15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து வருகிற 24 மற்றும் 31 ஆகிய தேதிகளில் இரவு 11 மணிக்கு புறப்பட்டு ஈரோடு செல்லும் சிறப்பு ரெயில் (06026), மறுநாள் இரவு 8.30 மணிக்கு ஈரோடு சென்றடையும்.
செகந்திராபாத் - வேளாங்கண்ணி சிறப்பு ரயில்:-
செகந்திராபாத்தில் இருந்து நாளை இரவு 7.25 மணிக்கு புறப்பட்டு வேளாங்கண்ணி செல்லும் சிறப்பு ரெயில் (07407), மறுநாள் மாலை 5.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.
மறுமார்க்கமாக, வேளாங்கண்ணியில் இருந்து வருகிற 25-ந்தேதி காலை 8 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (07408), மறுநாள் காலை 6.10 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.
பெங்களூர் - கொல்லம் சிறப்பு ரயில்:-
பெங்களூருவில் இருந்து வருகிற 25-ந்தேதி மதியம் 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06573) மறுநாள் காலை 6.30 மணிக்கு கொல்லம் சென்றடையும்.
மறுமார்க்கமாக கொல்லத்தில் இருந்து 26-ந்தேதி காலை 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06574) மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.
Tags: தமிழக செய்திகள்
