சென்னை அருகே சாலையோரம் நின்ற லாரி மீது BMW கார் மோதி விபத்து மருத்துவ கல்லூரி மாணவி உயிரிழப்பு
சென்னை அருகே சாலையோரம் நின்ற லாரி மீது BMW கார் மோதி விபத்து மருத்துவ கல்லூரி மாணவி உயிரிழப்பு
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே, சாலையோரம் நின்ற லாரி மீது BMW கார் மோதிய விபத்தில் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூன்று மாணவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இதில் குரோம்பேட்டை பாலாஜி மருத்துவக் கல்லூரி மாணவி மிஸ்பா பாத்திமா (21) சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.மேலும் மூன்று பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்த மிஸ்பா பாத்திமா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இரண்டு காரில் மாமல்லபுரம் சென்ற 10 மாணவர்கள் சென்னை திரும்பும்போது போட்டி போட்டு காரை அதி வேகத்தில் இயக்கியதால் விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் சிக்கியது கோவை அபினந்தன்(29), நெல்லையை சேர்ந்த செண்பக விநாயகம், நவியா , மிஸ்பா பாத்திமா, அனைவரும் ஒரே கல்லூரியில் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Tags: தமிழக செய்திகள்
