Breaking News

காஞ்சிபுரம் டிஎஸ்பிக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பித்த மாவட்ட நீதிபதி பணியிடை நீக்கம்

அட்மின் மீடியா
0

காஞ்சிபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷை சிறையில் அடைக்க உத்தரவிட்ட காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி செம்மலை பணியிடை நீக்கம் செய்து சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் உத்தரவு

வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட நபர்களை கைது செய்ய தவறியதற்காக, காஞ்சிபுரம் மாவட்ட டி.எஸ்.பி., சங்கர் கணேஷ் என்பவரை சிறையில் அடைக்க, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செம்மல் உத்தரவு பிறப்பித்தார். 

இதை எதிர்த்து, காஞ்சிபுரம் எஸ்.பி., - டி.எஸ்.பி., சங்கர் கணேஷ் மற்றும் வாலாஜாபாத் இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 

ந்த மனுக்களை விசாரித்த உயர் நீதி மன்றம், டி.எஸ்.பி., சங்கர் கணேஷை உடனே விடுதலை செய்ய உத்தரவிட்டதுடன், மாவட்ட நீதிபதியின் உத்தரவையும் ரத்து செய்தது.

மேலும், 'சம்பந்தப்பட்ட மாவட்ட நீதிபதி, தொடர்ந்து அதே இடத்தில் பணிபுரிவது உகந்த தாக இருக்காது என்பதால், அவர் மீது உடனே நடவடிக்கை எடுக்க, விசாரணை அறிக்கையை பணியிட மாற்றக் குழுவுக்கு அனுப்ப வேண்டும்' என்றும் உத்தரவிட்டப்பட்டது. 

முன்பகை விவகாரத்தில், காஞ்சிபுரம் டிஎஸ்பியை கைது செய்ய உத்தரவிட்ட, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செம்மல், அரியலுார் மாவட்ட லோக் அதாலத் தலைவராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தியது. இதனைத் தொடர்ந்து நீதிபதி செம்மலை சஸ்பெண்ட் செய்து உயர்நீதிமன்ற பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback