Breaking News

ஆண்டிபயாடிக் அட்டைகளின் பின்பக்கம் சிவப்புப் பட்டை இருந்தால் மட்டுமே வாங்க வேண்டும் - சுகாதாரத் துறை எச்சரிக்கை

அட்மின் மீடியா
0

சிவப்புக் கோடு இல்லாமல் எந்த ஒரு ஆண்டிபயாடிக் மாத்திரைகளையும் வாங்க வேண்டாம் என தமிழ்நாடு சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.

சிவப்புக் கோடு பட்டை குறிப்பிடாமல் உள்ள எந்த ஒரு ஆண்டிபயாட்டிக் மாத்திரைகளையும் வாங்க வேண்டாம் என தமிழக பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இந்த சிவப்பு நிற கோடுகள் குறித்து கடந்த 2016ம் ஆண்டு மத்திய சுகாதாரத்துறை சார்பில் ஒரு அறிவுரை வழங்கப்பட்டது. 



போலி இருமல் மருந்து விற்பனை மோசடிக்கு பிறகு ஆண்டிபயாட்டிக் மருந்து விற்பனையில் சில அதிரடி நடவடிக்கையை தமிழக சுகாதாரத்துறை எடுத்து வருகிறது.

அதன்படி ஆண்டிபயாடிக் மாத்திரையின் அட்டையில் பின்புறத்தில் சிவப்பு கோடு பட்டை இருந்தால் மட்டுமே மருந்துகளை உட்கொள்ள வேண்டும் என கூறியுள்ளது.

ஆண்டிபயாடிக் மாத்திரைகளில் சிவப்புக் கோடு பட்டை இல்லாமல் எந்த ஒரு மாத்திரைகளும் மருந்தகங்களில் வாங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிவப்புக் கோடு பட்டை இல்லாமல் விற்பனை செய்தால் மருந்தகங்களில் ஒட்டப்பட்டு இருக்கக்கூடிய க்யூ.ஆர் ஸ்கேன் மூலம் புகார்கள் அளிக்கலாம் எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், '' 

போலி மருந்துகள் விற்பனை செய்வதை அறிந்தால், மருந்தகங்களில் ஒட்டப்பட்டு இருக்கக்கூடிய க்யூஆர் ஸ்கேன் மூலம் புகார்கள் அளிக்கலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, "தமிழ்நாட்டில் உள்ள மருந்தகங்களில் விற்கப்படக்கூடிய ஆண்டிபயாடிக் மாத்திரைகளில் சிவப்புக் கோடு இல்லை என்றால் அவற்றை வாங்க வேண்டாம்'' என்று தமிழக சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.

அதன்படி, ஆண்டிபயாடிக் மாத்திரை அட்டையின் பின்புறத்தில், சிவப்பு கோடு இருந்தால் மட்டுமே மருந்துகளை உட்கொள்ள வேண்டும் எனவும், மாத்திரையில் சிவப்பு கோடு இல்லாவிட்டால் அதனை உட்கொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இப்படியான சிவப்பு நிற கோடு உள்ள மாத்திரைகள் அண்டி பயாட்டிக் மாத்திரைகளில் இருக்கும். இந்த மாத்திரைகளை டாக்டரின் அறிவுரையில்லாமல் சாப்பிடக்கூடாது. மற்றும் டாக்டரின் மருந்து சீட்டு இல்லாமல் விற்பனையும் செய்ய கூடாது அதனால் நீங்கள் இனி மாத்திரை வாங்கினீர்கள் என்றால் அதன் காலாவதி தேதியை மட்டும் பார்க்காமல் இந்த சிவப்பு கோட்டையும் பார்த்து வாங்குங்கள்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback