எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிக்க மேலும் 3 நாள் கால அவகாசம் நீட்டிப்பு தேர்தல் ஆணையம் அறிவிப்பு SIR form fill-up last date 2025
தமிழ்நாட்டில் SIR படிவங்களைச் சமர்ப்பிக்கும் கடைசி நாள் இன்று என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையம் மேலும் 3 நாட்கள் கால அவகாசத்தை வழங்கியுள்ளது. நிரப்பப்பட்ட படிவங்களை வரும் 14-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் SIR form fill-up last date 2025
தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் டிச.14ஆம் தேதி வரை நீட்டிப்பு தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் டிச.19ஆம் தேதி வெளியாகும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழகத்தில் எஸ்ஐஆர் (SIR) படிவங்களை அளிப்பதற்கான காலக்கெடு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அரசு 2வது முறையாக கால அவகாசத்தை வழங்கியுள்ளது.
புதிய காலக்கெடு டிசம்பர் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் சிரமமின்றி படிவங்களை சமர்ப்பிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.மக்கள் பயன்பெறும் வகையில் இந்த நீட்டிப்பு உதவும் எனவும், குறிப்பிட்ட தேதிக்குள் படிவங்களை சமர்ப்பிக்கும்படியும் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

