Breaking News

2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் டிச.15 முதல் விருப்ப மனு அளிக்கலாம் எடப்பாடி K.பழனிசாமி அறிவிப்பு

அட்மின் மீடியா
0

2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் டிச.15 முதல் விருப்ப மனு அளிக்கலாம் எடப்பாடி K.பழனிசாமி அறிவிப்பு



2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் டிச.15 முதல் விருப்ப மனு அளிக்கலாம்.

டிச.15 முதல் 23ம் தேதி வரை விருப்ப மனு விநியோகிக்கப்படும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது. காங்கிரஸ், அமமுக கட்சிகள் ஏற்கனவே விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியுள்ளன.

தலைமைக் கழக அறிவிப்பு

கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் முக்கிய அறிவிப்பு

தமிழ் நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் - 2026

விருப்ப மனுக்கள் பெறுதல் : 15.12.2025 முதல் 23.12.2025 வரை

தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்; புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தலைமைக் கழகத்தில் வருகின்ற 15.12.2025 - திங்கட் கிழமை முதல் 23.12.2025 செவ்வாய்க் கிழமை வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரையிலும்; முதல் நாளான 15.12.2025 அன்று நண்பகல் 12 மணி முதல், அதற்கான படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து, மேற்கண்ட காலத்திற்குள் தலைமைக் கழகத்தில் வழங்கலாம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எடப்பாடி K.பழனிசாமி கழகப் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர்

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback