முதல் முஸ்லீம் மேயர்! - அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதன் முதலாக முஸ்லீம் வெற்றி - Zohran Mamdani
அமெரிக்காவின் நியூயார்க் நகர முதல் முஸ்லீம் மேயர் மற்றும் முதல் இந்திய வம்சாவளி மேயர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஸோரான் மம்தானி.
மேயர் பதவிக்கான தேர்தலில் ஆளுங்கட்சி வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார் ஜனநாயக கட்சியின் ஸோரான் மம்தானி.
அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸோரான் மம்தானி (34) வரலாற்று வெற்றி பெற்றுள்ளார்.
அமெரிக்காவில் மிக முக்கியமான பிரபலமான நகரம் தான் நியூயார்க். இந்த நகரத்தின் மேயராக இருந்த ஜனநாயக கட்சியைச் சேர்ந்த எரிக் ஆடம்ஸ் ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் இந்த நகரத்திற்கு மேயர் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
ஜனநாயகக் கட்சி சார்பில் உகாண்டாவில் பிறந்து நியூயார்க் நகரில் வளர்ந்த 34 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி போட்டியிட்டார்.
அவரை எதிர்த்து டிரம்ப்பின் குடியரசுக் கட்சி சார்பில் கர்டிஸ் ஸ்லிவா போட்டியிட்டார். அதேபோல நியூயார்க்கின் முன்னாள் கவர்னர் ஆண்ட்ரூ கியூமோ சுயேச்சையாக களம் இறங்கினார்.
அக்டோபர் 25ஆம் தேதி தொடங்கிய வாக்குப்பதிவின் முடிவில் ஸோரான் மம்தானி தெளிவான வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1969க்குப் பிறகு அதிகபட்சமாக சுமார் 20 லட்சம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் நியூயார்க் நகரின் முதல் முஸ்லிம் மற்றும் இந்திய-அமெரிக்க மேயராகவும், தென்னாப்பிரிக்காவில் பிறந்து மேயரானவராகவும் ஸோரான் மம்தானி வரலாற்றை உருவாக்கியுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம், நியூயார்க் நகரத்தின் அரசியல் வரலாற்றிலேயே முதல் இந்திய-அமெரிக்க முஸ்லிம் மேயர் என்ற வரலாற்றுச் சாதனையை ஜோஹ்ரான் மம்தானி மாம்டானி படைத்துள்ளார்.
தனது முற்போக்கு கருத்துகளால் நியூயார்க் இளைஞர்கள் மற்றும் இடதுசாரி ஆதரவாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ஸோரான், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் உடனான கருத்து மோதலிலும் ஈடுபட்டிருந்தார்.
ஸோரான் வெற்றி பெற்றால், நியூயார்க் நகரத்துக்கு குறைந்தபட்ச நிதியைத் தவிர அனைத்து நிதியையும் நிறுத்திவிடுவதாக டிரம்ப் எச்சரித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Tags: வெளிநாட்டு செய்திகள்
