மருத்துவர் prescription இருந்தால் மட்டுமே இனி இருமல் மருந்து வாங்க முடியும்? - மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்
மருத்துவர் prescription இருந்தால் மட்டுமே இனி இருமல் மருந்து வாங்க முடியும்? - மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்
இந்தியாவில் இருமல் சிரப்கள் விற்கப்படும் விதத்தில் ஒரு பெரிய மாற்றத்தை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
மருந்து விற்பனை உரிமம் இல்லாமல் விற்கக்கூடிய மருந்துகளின் பட்டியலான அட்டவணையிலிருந்து இருமல் சிரப்களை நீக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.
மத்தியப் பிரதேசம் சிந்த்வாராவில் கலப்பட இருமல் மருந்து விவகாரத்தில் 22 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தயது.
இந்நிலையில் இனி மருத்துவர் பரிந்துரை இன்றி இருமல் மருந்து வாங்க முடியாது. மருந்து கடைகளில் மட்டுமே இம்மருந்துகள் விற்கப்படும் புதிய விதிமுறைகளை மத்திய சுகாதாரத் துறை அமல்படுத்தியுள்ளது.
இந்த முன்மொழிவு, எந்தவொரு மருந்துச் சீட்டுகளும் இல்லாமல் விற்க அனுமதிக்கப்பட்ட மருந்துகளின் பட்டியலிலிருந்து இருமல் சிரப்புகளை நீக்கக்கூடும் என்று இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. https://www.indiatoday.in/india/story/over-the-counter-sales-of-cough-syrup-might-soon-end-2821697-2025-11-18
Tags: இந்திய செய்திகள்
