Breaking News

பழைய வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் கட்டணம் பல மடங்கு உயர்வு Government Hikes Vehicle Fitness Test Fees

அட்மின் மீடியா
0

பழைய வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் கட்டணம் பல மடங்கு உயர்வு  Government Hikes Vehicle Fitness Test Fees

20 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தப்பட்டு வரும் பழைய வாகனங்களுக்கான தகுதி சான்றிதழ் கட்டணத்தையும் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் உயர்த்தியுள்ளது.



20 ஆண்டுகள் பழைய வாகனங்களுக்கான தகுதி சான்றிதழ் கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தியிருக்கிறது.அந்த வகையில், லாரி போன்ற கனரக வாகனங்களுக்கான கட்டணம் ரூ.3,500லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.

10 முதல் 15 ஆண்டுகள், 15 முதல் 20 ஆண்டுகள் மற்றும் 20 ஆண்டுகளுக்கு மேல் என 3 பிரிவுகளாக  2 வீலர், 3 வீலர், குவார்டி சைக்கில், இலகு ரக கார்கள், மிடியம் மற்றும் ஹெவி வாகனங்கள் வகைப்படுத்தப்பட்டுளது.

அந்த வகையில், 20 ஆண்டுகளுக்கும் மேல் உள்ள பழைய வாகனங்களுகுக்கான தகுதி சான்றிதழ் கட்டணம் மட்டும் உயர்த்தப்பட்டிருக்கிறது. 

அந்த வகையில், லாரி போன்ற கனரக வாகனங்களுக்கான கட்டணம் ரூ.3,500லிருந்து ரூ.25,000 ஆகவும், நடுத்தர வாகனங்களுக்கான கட்டணம் ரூ1800 ஆக இருந்தது ரூ20,000 ஆகவும், கார் போன்ற வாகனங்களுக்கான கட்டணம் ரூ.10,000லிருந்து ரூ.15,000 ஆகவும் பைக்குகளுக்கு ரூ.600லிருந்து ரூ.2,000 ஆகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது. எனவே பழைய வாகனங்களை வாங்குவோர் யோசித்து வாங்க வேண்டும்

பிரைவேட் வாகனங்களுக்கான கட்டணத்தை பொருத்தவரை 20 ஆண்டுகள் பழைய இலக ரக வாகன்ஙகளுக்கு ரூ15,000 கட்டணமும், 3 வீலர்களுக்கு ரூ7000மும் கட்டணமாக விதிக்கப்பட்டுள்ளது. அதே போல டூவீலர்களுக்கு ரூ600 கட்டணமாக இருந்தது தற்போது ரூ2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல 15 ஆண்டுகள் பழைய வாகனங்களுக்கான பிட்னஸ் சான்று கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback