Breaking News

Google Maps இந்த புதிய அம்சங்கள் பற்றி தெரியுமா - அட இத்தனை நாளை இது தெரியாம போச்சே

அட்மின் மீடியா
0

Google Maps இந்த புதிய அம்சங்கள் பற்றி தெரியுமா - அட இத்தனை நாளை இது தெரியாம போச்சே



  • கூகுள் மேப்பில் Gemini ஒருங்கிணைப்பின் மூலம் வாகனம் ஓட்டும் போதே அதனுடன் உரையாட முடியும். அதாவது மொபைலை மொபைலில் டைப் செய்யவேண்டாம் நீங்கள் பேசினால் போதும்  
  • மின் வாகனங்களின் பயன்பாடு இந்தியாவில் அதிகரித்து வருவதால், கூகுள் மேப்ஸ் இந்த தேவைபூர்த்தி செய்யும் வகையில் சார்ஜிங் ஸ்டேசன் எங்கு உள்ளது என அறிவிக்கும் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது.

  • ஜெமினி வழியாக பயணிகள் Gmail மற்றும் காலாண்டல் போன்ற பயன்பாடுகளுடன் இணைத்து, அவர்கள் திட்டமிட்ட இடங்களை தானாகவே மேப்ஸில் சேர்க்கவும் முடியும். இது பயண திட்டமிடலை இன்னும் சிறப்பாக ஆக்கும். மேலும், 
  • Gemini வலைத்தளங்களிலும், மேப்ஸ் விமர்சனங்களிலும் உள்ள தகவல்களை பகுப்பாய்வு செய்து, பயனாளர்களுக்கு அந்த இடம் குறித்து பயனுள்ள குறிப்புகள் மற்றும் நடைமுறைக்கு ஏற்ற ஆலோசனைகளை வழங்கும்.
  • இந்தியாவின் பெருநகரங்களில் மெட்ரோ பயணிகள் மிக அதிகம். அதனால், மெட்ரோ டிக்கெட் நேரடியாக கூகுள் மேப்ஸிலேயே பதிவு செய்யும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் கூகுல் வாலட் இணைப்பும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் பயணிகள் மெட்ரோ டிக்கெட்டுகளை வாங்கியவுடன், அவற்றை நேரடியாக கூகுல் வாலட்டில் சேமித்து, Maps வழியாக தங்களது பயணத்தின் போது எளிதில் அணுக முடியும்.
  • கூகுள் மேப்ஸ் டெல்லி, மும்பை, பெங்களூரு நகரங்களில் விபத்து ஆபத்துள்ள பகுதிகள் குறித்து முன்எச்சரிக்கை வழங்கும். இதன்மூலம் ஓட்டுநர்கள் ஆபத்தான இடங்களில் வேகத்தை குறைக்கவோ அல்லது மாற்று வழிகளை தேர்ந்தெடுக்கவோ முடியும். 
  • தேசிய நெடுஞ்சாலை ஆணையமான NHAIயின் நேரடி தரவுகளைப் பெற்று, சாலையில் ஏற்படும் போக்குவரத்து தடைகள் அல்லது விபத்துகள் பற்றிய real-time alert களையும் வழங்கும்
  • இரு சக்கர வாகன ஓட்டுநர்களுக்காக, மேப்ஸ் புதிய அவதார் வசதியையும் வழங்குகிறது. பயனாளர்கள் தங்களது வாகனத்தைக் காட்ட கிளாசிக் பைக், ஸ்போர்ட்ஸ் பைக் அல்லது ஸ்கூட்டர் போன்ற வடிவங்களில் எட்டு நிறங்களில் ஒன்றைத் தேர்வு செய்யலாம். 


Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback