பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல அரசுப் பேருந்தில் முன்பதிவு செய்யலாம் - முழு விவரம்
பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல அரசுப் பேருந்தில் முன்பதிவு செய்யலாம் - முழு விவரம்
2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய தயாராகி வருகின்றனர். இந்த பெருவிழா கால பயண வசதிக்காக, அரசுப் பேருந்துகளுக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (SETC) அறிவித்துள்ளது.
பண்டிகைக் கால அவசரங்களை தவிர்க்கவும், பயண சிரமங்களை நீக்கவும் மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் டிக்கெட்டுகளை இப்போதே முன்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வரும் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக் கொண்டாடப்படவிருப்பதை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் செல்வோருக்காக, அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவுகள் தொடங்கியிருக்கின்றன.
2026ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் விரைவில் அறிவிக்கப்படவிருக்கின்றன.தற்போது வழக்கமாக மற்றும் வார இறுதி நாள்களில் இயக்கப்படும் பேருந்துகளின் முன்பதிவு அதிகமாக இருந்தால், அதற்கேற்ப ஜனவரி மாதம் அல்லது டிசம்பர் இறுதியில் சிறப்புப் பேருந்துகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் www.tnstc.in என்ற இணையதளம் அல்லது அதன் செயலி வாயிலாக முன்பதிவு செய்யலாம்
Tags: தமிழக செய்திகள்
