திராவிட வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார் மல்லை சத்யா
அட்மின் மீடியா
0
திராவிட வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார் மல்லை சத்யா
மதிமுகவில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட மல்லை சத்யா 'திராவிட வெற்றிக் கழகம்' என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார்.
மதிமுக துணைப் பொதுச் செயலா் பதவியிலிருந்தும், அக்கட்சியிலிருந்தும் நீக்கப்பட்ட மல்லை சத்யா திராவிட வெற்றிக் கழகம்(DVK) என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மதிமுகவில் துணைப் பொதுச்செயலாளராக இருந்த மல்லை சத்யா, வைகோவுக்கு அடுத்த நிலையிலிருந்து கட்சியை வழிநடத்தினார். மல்லை சத்யாவின் புதிய கட்சியில் நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் இணைந்துள்ளனர்.
Tags: அரசியல் செய்திகள்