ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
அட்மின் மீடியா
0
ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் ஆகியோர் சட்டமன்றங்கள் நிறைவேற்றும் அசோதாக்கள் மீது முடிவெடுக்க உச்சநீதிமன்றம் கால நிர்ணயித்த விவகாரம் தொடர்பான குடியரசுத் தலைவரின் 14 கேள்விகள் மீது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பளித்துள்ளது
அரசியல் சாசன பிரிவு 200 இன் கீழ் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு மூன்று வாய்ப்புகள் தான் இருக்கிறது
மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கலாம் அல்லது நிராகரிக்கலாம் அல்லது திருப்பி அனுப்பலாம் மசோதாவை கிடைப்பில் போடுவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை .மத்திய அரசு சொல்வது போல நான்காவது வாய்ப்பு இல்லை
ஒரு மாநிலத்தில் 2 நிர்வாக அதிகார மையங்கள் இருக்கக்கூடாது மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது .மசோதா மீது முடிவெடுக்க ஆளுநர் தாமதிப்பது கூட்டாட்சிக்கு எதிரானது ஆளுநர் செயல்படாமல் இருந்தால் நீதிமன்றம் தலையிட அதிகாரம் உள்ளது -உச்சநீதிமன்றம்
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்