சபரிமலை கூட்ட நெரிசலில் சோகம் சபரிமலையில்- தரிசனத்திற்காக காத்திருந்த பெண் பக்தர் உயிரிழப்பு
லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு ஐயப்ப சாமியை பார்க்க முண்டியடித்து சென்றனர். கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் நெரிசலில் சிக்கி ஐயப்ப பக்தர் ஒருவர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த ஒரு பக்தர் கூட்ட நெரிசலால் மயங்கி விழுந்து பலியானதாக கூறப்படுகிறது.
கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவில், மண்டல மகர விளக்கு தரிசனம் தொடங்கியதையடுத்து நவம்பர் 16ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடக்க நாளில் இருந்தே சபரிமலையில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர்.தரிசனத்திற்கு 5 மணி நேரம் வரையில் பக்தர்கள் காத்திருந்ததாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் இன்று நவம்பர் 18ம் தேதி சபரிமலையில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் இருந்து சபரிமலை வந்திருந்த ஒரு பக்தர் கூட்ட நெரிசலில் சிக்கிய நிலையில், அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாகவும், இறுதியில் மயங்கி விழுந்து பலியானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags: இந்திய செய்திகள்
