Breaking News

சினிமா பாணியில் பட்டபகலில் ஏடிஎம் வாகனத்தை கடத்தி ரூ.7.11 கோடி கொள்ளையடித்து சென்ற கும்பல் பெங்களூரில் பரபரப்பு

அட்மின் மீடியா
0
சினிமா பாணியில் பட்டபகலில் ஏடிஎம் வாகனத்தை கடத்தி ரூ.7.11 கோடி கொள்ளையடித்து சென்ற கும்பல் பெங்களூரில் பரபரப்பு




பெங்களூரு சவுத் எண்ட் சர்க்கிள் பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு பணம் நிரப்ப HDFC வங்கி கிளையில் இருந்து ஒரு வேன் பணத்தை ஏற்றிச் சென்று கொண்டிருந்தது. 

அப்போது ஒரு டொயோட்டா இன்னோவா கார் இவர்களை திடீரென வழிமறித்து நிறுத்தி அதில் இருந்து இறங்கிய 7 பேர் வங்கி ஊழியர்களிடம் நாங்கள் ரிசர்வ் வங்கியை சேர்ந்தவர்கள்  ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். 

இதையடுத்து, பணத்தை கொண்டு சென்ற வாகனத்தை அந்த கும்பல் கடத்தியுள்ளது. வாகனத்தில் இருந்த ரூ. 7 கோடி ரூபாய் பணத்தை அந்த கும்பல் எடுத்துக்கொண்டு அதில் பயணித்த காவலாளி, டிரைவரை அப்பகுதியில் உள்ள மேம்பாலத்தில் இறக்கிவிட்டு சென்றுள்ளது.

பணம் கொள்ளையடிக்கப்பட்டதை உணர்ந்த ஏடிஎம் வாகன காவலாளி உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், ரு. 7 கோடியை கொள்ளையடித்து சென்ற கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். 

The Bengaluru City Police have formed special teams to investigate the case, analyzing CCTV footage from the surrounding areas. Checkpoints have been set up across the city as authorities search for the suspects, who appear to be a well-organized gang. No arrests have been made as of November 19, 2025

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback