Breaking News

சென்னையில் பச்சிளம் பெண் குழந்தையை விற்பனை செய்த தாய், தந்தை உள்பட 6 பேர் கைது

அட்மின் மீடியா
0

சென்னை கண்ணகி நகரில் ஒன்றரை மாத பெண் குழந்தையை ரூ.2.20 லட்சத்திற்கு விற்பனை செய்த தாய், தந்தை, மாமியார், குழந்தையை விற்பனை செய்ய உதவிய 3 பெண்கள் என 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.


எழில் நகரைச் சேர்ந்த வினிஷா, ஸ்ரீதர் தம்பதிக்கு ஏற்கெனவே 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் நான்காவதாக பிறந்த குழந்தையை விற்பனை செய்துள்ளனர் 

சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகர் எழில் நகரை சேர்ந்த ஸ்ரீஜி (27), பெயிண்டர்; மனைவி வினிஷா (23). இவர்களுக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த மே மாதம் நான்காவது குழந்தையும் பெண் குழந்தையாகப் பிறந்தது.வறுமையால் நான்காவது குழந்தையை வளர்க்க முடியாது என முடிவு செய்த தம்பதியினர், அந்த 3 மாத குழந்தையை விற்றுவிட திட்டமிட்டதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் தாய் வினிஷா, மாமியார் சரளா மற்றும் தோழி சிவரஞ்சனி மூலம் குழந்தைக்கு வாங்குபவரை தேடியுள்ளார்.இதன் தொடர்ச்சியாக சுமதி என்ற பெண் ஒப்பந்தத்தை ஏற்பாடு செய்து, குழந்தையை திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த, குழந்தை இல்லாமல் 10 ஆண்டுகளாக தவித்த தம்பதியிடம் கடந்த ஜூலை மாதம் ஒப்படைத்துள்ளனர். 

இதற்காக தம்பதியினர் ரூ.2.20 லட்சம் பெற்றதாகவும், அதிலிருந்து இடைநிலையாளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வாரம் ஒருமுறை அந்த தம்பதி குழந்தையுடன் சென்னைக்கு வந்தபோது இந்த தகவல் குழந்தைகள் நல துறைக்கு தெரியவந்தது. 

குழந்தைகள் நல அலுவலர் புகாரின் பேரில் கண்ணகி நகர் போலீசார் ஸ்ரீஜி, வினிஷா, சரளா, சிவரஞ்சனி, சகாயமேரி, சுமதி ஆகியோரை கைது செய்தனர். குழந்தை விற்பனை தொடர்பாக மேலும் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback