பிரேசில் மாடல் புகைப்படத்துடன் பல பெயர்களில் 22 வாக்குகள்.. ஹரியானாவில் வாக்குத் திருட்டை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்திய ராகுல் காந்தி
பிரேசில் மாடல் புகைப்படத்துடன் பல பெயர்களில் 22 வாக்குகள்.. ஹரியானாவில் வாக்குத் திருட்டை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்திய ராகுல் காந்தி
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு தொகுதியில் நடந்த தேர்தலில் வாக்குகள் ஆன்லைன் மூலம் நீக்கப்பட்டு, பல்வேறு வாக்குகள் சேர்க்கப்பட்டு உள்ளதாக ராகுல் காந்தி முன்னதாக பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.அந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில்,
அடுத்ததாக மராட்டிய மாநிலத்திலும் வாக்கு திருட்டு நடைபெற்றதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இது குறித்து டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பான ஆதாரங்களை ‘ஹெச் பைல்ஸ்’ (H Files) என்ற பெயரில் வெளியிட்டு ராகுல் காந்தி பேசினார். அப்போது
ஹரியானாவில் ஆட்சித் திருட்டு நடந்துள்ளது. வாக்குத் திருட்டு நடக்காமல் இருந்திருந்தால் காங்கிரஸ் அங்கு ஆட்சி அமைத்திருக்கும். வரலாற்றில் முதல்முறையாக தபால் வாக்குகளுக்கும், மின்னணு இயந்திர வாக்குகளுக்கும் தொடர்பே இல்லாமல் இருந்துள்ளது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் ஹரியானாவில் காங்கிரஸ் வெல்லும் என்று கணித்தன. ஆனால் நடந்தது வேறு. ஹரியானா வரலாற்றில் முதல் முறையாக தபால் ஓட்டுகளில் வித்தியாசம் வந்துள்ளது. இது இதற்கு முன்பு நடந்தது இல்லை.
ஹரியானாவில் ஏதோ தவறு இருப்பதாகவும், எதுவும் சரியாக நடைபெறவில்லை என்றும் காங்கிரஸ் வேட்பாளர்களிடமிருந்து நிறைய புகார்கள் வந்தன.
இதுபற்றி ஆய்வு செய்தபோது என்னால் நம்ப முடியவில்லை. இதனால் டீமை பலமுறை பரிசோதிக்க உத்தரவிட்டேன். காங்கிரஸின் மகத்தான வெற்றியை ஓட்டு திருட்டு மூலம் தடுத்து விட்டனர்.
அதில் பிரேசிலைச் சேர்ந்த மாடல் ஒருவரின் புகைப்படத்துடன் அரியானாவில் பல பெயர்களில் 22 வாக்குகள் பதிவாகியுள்ளன. இது தனிப்பட்ட தொகுதிகளில் மட்டுமில்லாமல், மாநில அளவிலும், தேசிய அளவிலும் நடக்கிறது என்று நாங்கள் சந்தேகிக்கிறோம் என்றார்.
மேலும் ஹரியானாவில் 2 பூத்களில் ஒரு வாக்காளரின் போட்டோ 223 இடங்களில் இருந்தது. மொத்தமாக பார்த்தால் ஹரியானாவில் 1,24,177 வாக்காளர்கள் ஒரே போட்டோவில் இருக்கின்றனர். ஹரியானாவில் 5,21,619 போலி வாக்காளர்கள் உள்ளனர்.
Tags: அரசியல் செய்திகள்


