Breaking News

முதலமைச்சர் வேட்பாளர் விஜய் மட்டும் தான் - தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள் என்ன என்ன முழு விவரம் இதோ..!

அட்மின் மீடியா
0

தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள் என்ன என்ன முழு விவரம் இதோ..!




சட்டசபை தேர்தலைச் சந்திக்க தமிழக வெற்றிக் கழகம் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் கட்சிக்குப் புதிய நிர்வாகிகளைத் த.வெ.க. தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இந்நிலையில், சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று மாமல்லபுரத்தில் நடக்கின்றது

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் தலைமையில், இன்று (05.11.2025, புதன்கிழமை) காலை 10.00 மணிக்கு, மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெற உள்ள கழகச் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது

தவெக பொதுக்குழுவில் முதல்வர் வேட்பாளர் அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் என்றும் கூட்டணி குறித்து முடிவெடுக்க விஜய்க்கு அதிகாரம் வழங்கப்படுவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கரூர் தவெக பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கு, அக்கட்சியின் சிறப்பு பொதுக்குழுவில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நடைபெற்றது.

1.கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த உறவுகளுக்கு இரங்கல் 

2.கோவையில் கல்லூரி மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார் என்ற செய்தி தமிழ்நாட்டையே பதற வைத்துள்ளது இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்தி சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனையை பெற்று தர வேண்டும். இந்த வெற்று விளம்பர மாடல் திமுக ஆட்சியில் தமிழ்நாடு தலைகுனிந்து நிற்கிறது. சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யாத இந்த திமுக அரசுக்கு வன்மையான கண்டனங்களை தெரிவித்து உள்ளது.தீ

3. தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 35 மீனவர்கள் கைதுக்கு கண்டனம் நம்முடைய மீனவச் சகோதரர்கள் 800 பேருக்கு மேல், இலங்கைக் கடற்படை தாக்கி மாண்டுள்ளனர். ஆயிரக்கணக்கான படகுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன, கடலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. நம் மீனவச் சகோதரர்கள் மீதான இலங்கைக் கடற்படையின் தாக்குதலும் கைது நடவடிக்கையும் ஈவு இரக்கமின்றி, தொடர்ந்து நீடித்த வண்ணமே உள்ளன.சமீபத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நம் மீனவச் சகோதரர்கள் 35 பேரை இலங்கைக் கடற்படை கைது செய்தது. அத்தோடு, அவர்களுக்குச் சொந்தமான மூன்று விசைப் படகுகளையும் ஒரு நாட்டுப் படகையும் பறிமுதல் செய்தது.இலங்கைக் கடற்படையின் இந்த அராஜகச் செயலை ஒன்றிய பா.ஜ.க. அரசு, ஓர வஞ்சனையுடன் கண்டும் காணாமல் கண்மூடிக் கொண்டிருப்பது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அதே போல, நம் மீனவச் சகோதரர்கள் விஷயத்தில் கடிதம் மட்டுமே எழுதிவிட்டு, கண்மூடித் துயில் கொள்வதே வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் வாடிக்கையாகிவிட்டது.கைது செய்யப்பட்ட நம் மீனவச் சகோதரர்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அவர்களது படகுகளையும் மீட்டுத்தர வேண்டும். இதற்கான நடவடிக்கையை ஒன்றிய பா.ஜ.க. அரசு தாமதமின்றி உடனடியாக எடுக்க வேண்டும். ஒன்றிய அரசுக்கு உரிய அழுத்தத்தைத் தமிழக அரசும் தாமதிக்காமல் உண்மையாகத் தர வேண்டும். மேலும், நம் மீனவச் சகோதரர்களின் இன்னல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, நிரந்தரத் தீர்வை நோக்கி ஒன்றிய அரசு நகர வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்புப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.

4.தமிழ்நாட்டில் வாக்காளர்களின் ஜனநாயகக் கடமையான வாக்குரிமையைப் பறிக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளை நிறுத்துகதமிழ்நாட்டில் வாக்காளர்களின் ஜனநாயக கடமையான வாக்குரிமையை பறிக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை திருத்தப்படும் தீர்மானம். 

வாக்காளர் பட்டியல் திருத்தணி மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையை அச்சுறுத்தும் ஒரு செயலாகவே இருக்கிறது இன்னும் முழுமையாக வெளியாகாத நிலையில், அடுத்த கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெறும் என அறிவித்து இந்திய தேர்தல் ஆணையம், பணிகளை சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தவறான புகைப்படங்கள் என் நாட்டின் பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்தும் தொடர்ந்து பட்டியல் வழக்கில் ஒரு தீர்வு எட்டப்படாமல் தற்போது நிலவும் சிறப்பு தீவிர திருத்த பணிகளை மேற்கொள்வது. மேலும் தமிழக சிறப்பு தீவிர திருத்த பணிகளை மேற்கொள்ள அவகாசம் கொடுத்துள்ளார் .தமிழ்நாட்டில் அத்தனை பெயர்களையும் சரிபார்க்க ஒரு மாத காலம் எந்தவித அரசியல் குறிப்பீடு மற்ற சுதந்திரமான தேர்தல் நடைபெற சிறப்பு தீவிர திருத்தம் நடைமுறையை கைவிட்டு ஏற்கனவே இருக்கும் பழைய நடைமுறையை தேர்தல் ஆணையம் பின்பற்ற வேண்டும் என்று தமிழக வெற்றி கழகத்தின் சிறப்பு பொதுக்குழு வலியுறுத்துகிறது.

5.டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளிடம் உரிய நேரத்தில், கொள்முதல் செய்யாமல் நெல் உள்ளிட்ட தானியங்கள் மழையில் நனைந்து, மூட்டையிலேயே முளைத்து வீணாகும் நிலைக்குக் காரணமான, விவசாயிகள் விரோத ஆட்சியாளர்களுக்குக் கண்டனம்.

6.வடகிழக்குப் பருவமழை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருப்பதால், தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும், மழைநீர் வடிகால்களைச் சீரமைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்கூட்டியே செய்து முடிக்க வேண்டும்

7.பாதுகாக்கப்பட்ட ராம்சர் சதுப்பு நிலத்தில் கட்டுமானம் கட்டத் தனியார் நிறுவனத்திற்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.

8.மக்கள் சந்திப்பு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் கழகத் தலைவருக்கும் அவரைக் காண வரும் பொதுமக்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் தமிழக அரசு, முழுமையான பாதுகாப்பு வழங்க வேண்டும்.

9.கழகத்தின் மீதும் கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் மீதும் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அவதூறுகளைப் பரப்பும் ஆளுங்கட்சியின் கைக்கூலிகளாகச் செயல்படுபவர்களுக்குக் கண்டனம்.

10.தமிழகத் தொழில் துறைக்கு வந்திருக்கும் முதலீடுகள், அவற்றின் மூலம் உருவான வேலைவாய்ப்புகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

11.தமிழ்நாட்டில் ஜனநாயக அடிப்படையில் பொதுப் பிரச்சனைகளில் கருத்துத் தெரிவிப்பவர்களைக் கைது செய்து, அவர்களின் கருத்துரிமையைச் சிதைக்கும் வெற்று விளம்பர மாடல் அரசுக்குக் கண்டனம்

12.கூட்டணி நிலைப்பாட்டில் தலைவருக்கு முழு அதிகாரம்தமிழகம் முழுவதும் கோடானு கோடி மக்களின் பேராதரவைப் பெற்று, முதன்மைச் சக்தியாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் நம் வெற்றித் தலைவர் அவர்கள் தலைமையில், 2026 சட்டமன்றத் தேர்தலைச் சந்திப்பது என்றும், தேர்தல் கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் முழு அதிகாரத்தைக் கழகத் தலைவர் அவர்களுக்கே வழங்கி, இச்சிறப்புப் பொதுக்குழு ஒப்புதல் அளிக்கிறது.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback