காதலை மறுத்த 12ஆம் வகுப்பு மாணவி... பட்டப்பகலில் நடுரோட்டில் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். என்ன நடந்தது? முழு விபரம் உள்ளே.
அட்மின் மீடியா
0
ராமேஸ்வரம், சேராங்கோட்டைப் பகுதியில் பள்ளிக்குச் சென்ற 12 ம் வகுப்பு மாணவியைக் கத்தியால் குத்தி கொன்ற இளைஞரைக் காவல்துறையினர் கைதுசெய்து விசாரித்துவருகின்றனர். காதலை ஏற்க மறுத்ததால் இளைஞர் வெறிச்செயல்..
ராமேஸ்வரம் நகரில் நெஞ்சை உலுக்கும் ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
காதலை ஏற்க மறுத்த பள்ளி மாணவி மீது, ஒரு இளைஞன் நடத்திய கொடூரமான தாக்குதல் இப்பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ராமேசுவரத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். மாரியப்பனுக்கு 2 மகள்கள் உள்ள நிலையில் மூத்த மகள் ஷாலினி. இவர் ராமேசுவரம் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த முனிராஜ் (21) என்ற வாலிபர் பள்ளி மாணவியை கடந்த சில நாட்களாக காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். இதுகுறித்து மாணவி அவரது தந்தை மாரியப்பனிடம் கூறியுள்ளார். இதனையடுத்து முனிராஜ் வீட்டிற்கு சென்ற மாரியப்பன் இளைஞரை கண்டித்துள்ளார்.
இன்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற பிளஸ்-2 மாணவி ஷாலினியை வாலிபர் வழிமறித்து காதலிக்குமாறு மீண்டும் வற்புறுத்தி உள்ளார். ஆனால் மாணவியோ மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முனிராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியை சரமாரியாக குத்தியுள்ளார்.இதனை சற்று எதிர்பாராத மாணவி நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து முனியராஜன் அங்கிருந்து தப்பி ஓடினார். இந்த கொடூர சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துறைமுக போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம், சமூகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள சில பிரச்சனைகளை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
அப்பள்ளி மாணவி, தனது படிப்பிலும் எதிர்கால கனவுகளிலும் கவனம் செலுத்தி வந்த நிலையில், அந்த இளைஞனின் காதல் தொல்லையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பலமுறை மறுப்பு தெரிவித்தும், அவன் விடாமல் பின் தொடர்ந்தது அவளுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது.
தனது விருப்பத்திற்கு மாறாக எதையும் செய்யக்கூடாது என்ற உறுதியுடன் அவள் இருந்தாள். ஆனால், அவளது மறுப்பு அந்த இளைஞனுக்குக் கோபத்தையும் ஆத்திரத்தையும் தூண்டியிருக்கிறது.
இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம், ராமேஸ்வரத்தின் அமைதியான சூழலை உலுக்கியுள்ளது.
Tags: தமிழக செய்திகள்