அபுதாபி வரும் சுற்றுலா பயணிகளுக்கு 10GB டேட்டாவுடன் இலவச சிம் கார்டு.. அபுதாபி அறிவிப்பு zayed international airport free sim with 10 GB
அபுதாபி வரும் சுற்றுலா பயணிகளுக்கு 10GB டேட்டாவுடன் இலவச சிம் கார்டு.. அபுதாபி அறிவிப்பு zayed international airport free sim with 10 GB Data
வெளிநாடுகளில் இருந்து அபுதாபியின் சயீத் சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு 24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும் 10GB டேட்டாவுடன் கூடிய சிம் கார்டை இலவசமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது
தலைநகரில் தரையிறங்கும் ஒவ்வொரு பயணிக்கும் உடனடி தடையற்ற இணைய சேவை கிடைப்பதை நோக்கமாக கொண்டு, அபுதாபி விமான நிலையம் மற்றும் e& நிறுவனம் இணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளன
அமீரக தலைநகரான அபுதாபிக்கு வரும் சர்வதேச பார்வையாளர்களுக்கு இலவச சிம் கார்ட் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும் இந்த இலவச 10 GB டேட்டா மூலம் பயணிகள் மேப், பயணம் செய்தல், பணம் செலுத்துதல், தொடர்பு கொள்ளுதல் மற்றும் அபுதாபி பாஸ் போன்ற இலக்கு வழிகாட்டிகள் போன்ற அத்தியாவசிய ஆன்லைன் சேவைகளை எளிதாகப் பயன்படுத்த முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
யாருக்கெல்லாம் கிடைக்கும்:-
சயீத் சர்வதேச விமான நிலையத்திற்கு (AUH) வரும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும்
10 ஜிபி அதிவேக டேட்டா.
இலவச 10 ஜிபி செயல்படுத்தப்பட்டதிலிருந்து முதல் 24 மணிநேரங்களுக்கு செல்லுபடியாகும்.
உலகத் தரம் வாய்ந்த சேவைக்கான அபுதாபி விமான நிலையத்தின் நற்பெயருக்கு ஏற்றவாறு (தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக "உலகளவில் வருகையில் சிறந்த விமான நிலையம் ஆகும்
ADVERTISEMENTஅபுதாபியின் சையத் சர்வதேச விமான நிலையம் உலகின் வேகமாக வளர்ந்து வரும் விமான மையங்களில் ஒன்றாகும், இது 30க்கும் மேற்பட்ட விமான நிறுவனங்களின் நெட்வொர்க் மூலம் 100க்கும் மேற்பட்ட இடங்களுக்கு பயணிகளை இணைக்கிறது. அத்துடன் இதன் புதிய டெர்மினல் கடந்த செப்டம்பர் 30, 2025 நிலவரப்படி 23.9 மில்லியன் பயணிகளை கையாண்டுள்ளது. இது உலகளாவிய இலக்கமாக அபுதாபியின் முக்கியத்துவத்திற்கு சான்றாகும்.இது குறித்து தெரிவிக்கையில் “அபுதாபி விமான நிலையங்களில், எங்கள் முன்னுரிமை விமான நிலைய அனுபவங்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதும், ஒவ்வொரு பயணியும் அபுதாபிக்கு வந்தவுடன் வரவேற்கப்படுவதை உறுதி செய்வதும் ஆகும்” என்று அபுதாபி விமான நிலையங்களின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலினா சோர்லினி கூறியுள்ளார்
Tags: வெளிநாட்டு செய்திகள்
