புதுமைப் பெண் திட்டம் மாதம் ரூபாய் 1000 பெற கல்லூரி மாணவிகள் விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம் pudhumai penn scheme apply online
புதுமைப் பெண் திட்டம் மாதம் ரூபாய் 1000 பெற கல்லூரி மாணவிகள் விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம் pudhumai penn scheme apply online
புதுமைப் பெண்" திட்டத்தின் கீழ், வருகிற கல்வியாண்டு முதல் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ் வழி கல்வியில் படித்த மாணவிகளுக்கு உயர்கல்வி முடிக்கும் வரை மாதம் ரூ.1000/- வழங்கும் திட்டம் pudhumai penn scheme apply online
அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து, உயர்கல்வி படிப்பதற்கு சேரும் அனைத்து மாணவிகளுக்கும், மாதம் ரூ. 1,000/ உதவித்தொகை வழங்கும் திட்டம்.
தகுதிகள் :
6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்த மாணவிகளாக இருத்தல் அவசியம்.
கல்லூரியில் சென்று பயிலும் மாணவியருக்கே இந்த உதவித்தொகை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
மாணவியர் தாங்கள் உயர்கல்வி பயிலும் கல்லூரி ஒருங்கிணைப்பாளரை அணுகி umis.tn.gov.in இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.
பெண் கல்வியை போற்றும் விதமாகவும், உயர்கல்வியை உறுதி செய்து இன்றைய பெண் சமூகம் நாளைய தமிழகத்தை தாங்கும் அறிவியல் வல்லுநர்களாகவும், மருத்துவராகவும், பொறியாளராகவும், படைப்பாளராகவும், நல்ல குடிமக்களை பேணும் உயர்கல்வி கற்ற பெண்களாகவும், கல்வி அறிவு தொழில்நுட்பம் நிறைந்த உழைக்கும் சமூகத்தை சார்ந்தவராகவும் உருவாக அடித்தளமாக "புதுமைப் பெண்" என்னும் உன்னதமான திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலமாக "புதுமைப் பெண்" திட்டத்தில், அரசு பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் உயர்கல்வி முடிக்கும் வரை மாதம் ரூ.1000/- அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் சென்னை மாவட்டத்தில் 11.015 மாணவிகள் மாதம் ரூ. 1000/- பெற்று வருகின்றனர். கடந்த ஆண்டு வரை அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இந்த திட்டத்தால் பயன்பெற்றனர்.
6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ் வழி கல்வியில் படித்த மாணவிகளுக்கு உயர்கல்வி முடிக்கும் வரை மாதம் ரூ.1000/- அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும் .
