கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 10 ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் முழு விவரம் village-assistant-post
தூத்துக்குடி மாவட்டம் வருவாய் அலகில், காலியாகவுள்ள கிராம உதவியாளர் பணியிடத்திற்கு நேரடி நியமனம் செய்வதற்காக இவ்வலுவலக திருத்திய அறிவிக்கை எண்: 01/2025 நாள்: 12.07.2025-ன்படி விண்ணப்பங்கள் பெறப்பட்டு எழுத்து தேர்வு 06.09.2025 அன்றும் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணி 18.09.2025 மற்றும் 19.09.2025 அன்றும் நடைபெற்றது.
இந்நேர்வில் அரசு கடித எண். (Ms).No. 636/Ser8(1)/2025 फ्रान 18.09.2025 /வருவாய் நிருவாக ஆணையர் அவர்களின் கடித எண் ந.க.வ.நி.2(2)/02-28/1/2024 நாள் 22.09.2025-ன்படி கிராம உதவியாளர் பதவிக்கான உச்சபட்ச வயது வரம்பு உயர்த்தி கடிதம் வரப்பெற்றுள்ளதன் பேரில் புதிய தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
(இவ்வலுவலக அறிவிக்கை எண் 01/2025 நாள் 12.07.2025-ன்படி ஏற்கனவே விண்ணப்பித்து எழுத்துத்தேர்வு, வாசித்தல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு வருகை தந்த விண்ணப்பதாரர்கள் தற்போது விண்ணப்பிக்க தேவையில்லை.)
கல்வித்தகுதி
தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இடைநிலைப் பள்ளி இறுதி வகுப்பு சான்றிதழ் தேர்வில் (SSLC-Secondary School Leaving Certificate Examination) தமிழ் ஒரு பாடமாகக் கொண்டு தேர்வு எழுதப்பட்டிருக்க வேண்டும். (குறிப்பு: SSLC- (Secondary School Leaving Certificate Examination) மதிப்பெண் பட்டியல் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்) (குறைந்தபட்ச கல்வித்தகுதி ) பத்தாம் வகுப்பு தோல்வி
இதர தகுதிகள்
1.விண்ணப்பதாரர் அந்த வட்டத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். 2.தமிழில் பிழையின்றி எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். 3.காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட கிராமத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அக்கிராம பணியிடத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மேலும், விண்ணப்பதாரா் ஓட்டுநா் உரிமம் வைத்திருந்தாலும் அல்லது இருசக்கர வாகனம் ஓட்டும் திறன் பெற்றிருந்தாலும் முழு மதிப்பெண் வழங்கப்பட வேண்டும். கிராம உதவியாளா் பணிக்கென நடைபெறும் நோ்காணலின் போது, வாசித்தல் மற்றும் எழுதும் திறன் சோதிக்கப்படும். விண்ணப்பதாரரின் வாசிக்கும், படிக்கும் திறனுக்கேற்ப மட்டுமே மதிப்பெண் வழங்கப்பட வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் மேற்படி பணிக்கான விண்ணப்ப படிவத்தினை முழுமையாக பூர்த்தி செய்து உரிய ஆவண இணைப்புகளுடன் சம்பந்தப்பட்ட வட்டாட்சியருக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளித்து விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.11.2025
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://thoothukudi.nic.in/notice/applications-are-invited-for-village-assistant-post-2025/
Tags: வேலைவாய்ப்பு
