Breaking News

முன்பதிவு செய்த ரயில் டிக்கெட் தேதிய மாத்தணுமா கேன்சல் செய்யாமல் மாத்தி கொள்ளலாம் புதிய நடைமுறை முழு விவரம்

அட்மின் மீடியா
0

முன்பதிவு செய்த ரயில் டிக்கெட் தேதிய மாத்தணுமா புதிய நடைமுறை முழு விவரம்



இந்திய ரயில்வேயில் தற்போது உள்ள நடைமுறைப்படி, கடைசி நேரத்தில் நமது பயணத் தேதியை மாற்ற வேண்டும் என்றால், ஏற்கனவே முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு, புதிய தேதியில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். 

இந்நிலையில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஏற்கனவே உள்ள நடைமுறை  மாற்றப்பட்டு ஜனவரி மாதம் முதல் உறுதி செய்யப்பட்ட முன்பதிவு டிக்கெட்டின் தேதியை, அப்படியே வேறு ஒரு புதிய தேதிக்கு கட்டணம் இல்லாமல் மாற்றிக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.

எனினும், புதிய தேதியில் ரயிலில் உறுதி செய்யப்பட்ட டிக்கெட் பெறுவதற்கான உத்தரவாதத்தை அளிக்க முடியாது என்றும், அந்த நேரத்தில் ரயிலில் உள்ள இருக்கைகளின் நிலையை பொறுத்தே கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். 

மேலும், புதிய தேதியின்படி டிக்கெட் விலையில் ஏதேனும் மாற்றம் இருந்தால், அந்த அதிகப்படியான தொகையை மட்டும் பயணிகள் செலுத்த வேண்டிவரும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback