Breaking News

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு




தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,708 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் ஆன்லைன் வழியாக அக்டோபர் 17 முதல் விண்ணப்பிக்கலாம்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,708 உதவிப் பேராசிரியர் காலி இடங்களுக்கு நேரடி நியமன அறிவிக்கையை TRB வெளியிட்டது. அக். 17) முதல் வரும் நவம்பர் 10ம் தேதி வரை ஆன்லைன் வழியே விண்ணப்பிக்கலாம்

பாட வாரியான காலிப் பணியிட விபரங்கள், கல்வித்தகுதி உள்ளிட்டவற்றை www.trb.tn.gov.in இணையதளத்தில் பார்க்கலாம்

வயது வரம்பு 

உதவிப் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பிக்க 01.07.2025 தேதியின்படி, 57 வயதைக் கடந்திருக்கக்கூடாது. ஏற்கனவே 14.03.2024-ம் தேதியில் வெளியிடப்பட்ட அறிவிப்பிற்கு விண்ணப்பித்தவர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித்தகுதி 

அரசு கல்லூரி உதவிப் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பிக்க அந்தந்த பாடப்பிரிவுகளில் முதுகலை பட்டப்படிப்பை 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் e UGC/CSIR NET அல்லது SLET/SET ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

சில குறிப்பிட்ட ஆண்டுகளில் பிஎச்.டி முடித்தவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 

இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:-

அரசாணை நிலை எண்.230 மற்றும் 231 உயர் கல்வித்(F2)துறை. நாள்.06.10.2025. இன்படி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு கடந்த 14.03.2024 அன்று வெளியிடப்பட்ட அறிவிக்கை எண். 02/2024 ரத்து செய்யப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரிய (Website:https://www.trb.tn.gov.in) இணையதளம் கல்லூரிகளுக்கான 2,708 உதவிப் பேராசிரியர் காலிப்பணியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்புவதற்கான புதிய அறிவிக்கை எண்.04/2025 இன்று (16.10.2025) வெளியிடப்படுகிறது.

பாடவாரியான காலிப் பணியிட விவரங்கள், கல்வித் தகுதி, வயது மற்றும் விண்ணப்பம் செய்வதற்கான அனைத்து விவரங்களும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

மேலும். விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க நாளை (17.10.2025) முதல் (10.11.2025) வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிக்கை எண்:12/2019, நாள் 28.08.2019 & 04.10.2019 மற்றும் அறிவிக்கை எண்: 02 / 2024, நாள்:14.03.2024-இன்படி, விண்ணப்பித்த பணிநாடுநர்கள் இப்புதிய அறிவிக்கையின்கீழ் மீண்டும் வேண்டும். இவர்களுக்கு மட்டும் விண்ணப்பிக்க இப்புதிய விண்ணப்பத்திற்கான தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களித்தும் மற்றும் வயது வரம்பில் தளர்வும் வழங்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://trb.tn.gov.in/admin/pdf/8098279381AP_compressed.pdf

Tags: தமிழக செய்திகள் வேலைவாய்ப்பு

Give Us Your Feedback