Breaking News

மத்திய அரசு பள்ளியில் 10,12, டிகிரி படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு

அட்மின் மீடியா
0

மத்திய அரசு பள்ளியில் 10,12, டிகிரி படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு 





ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகள் (Eklavya Model Residential Schools-EMRS) என்பவை மத்திய அரசின் பழங்குடியினர் நல அமைச்சகத்தால் பழங்குடியின மாணவர்களுக்காக தொடங்கப்பட்ட உண்டு உறைவிடப் பள்ளிகள் ஆகும். 

இந்த பள்ளிகள் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி, உணவு மற்றும் தங்குமிட வசதிகளை இலவசமாக வழங்குகின்றன. 

இவை நவோதயா வித்யாலயா பள்ளிகளைப் போன்றவை மற்றும் CBSE பாடத்திட்டத்தைப் பின்பற்றுகின்றன.

நோக்கம்: பழங்குடியின மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குதல்.

வசதிகள்: கல்வி, உணவு, தங்குமிடம் போன்ற வசதிகளை இலவசமாக வழங்குகின்றன.

பாடத்திட்டம்: CBSE பாடத்திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.தேர்ச்சி விகிதம்: இந்தப் பள்ளிகளில் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளின் சராசரி தேர்ச்சி விகிதம்க்கும் அதிகமாக உள்ளது.

பணி:-

முதல்வர் 

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்

பட்டதாரி ஆசிரியர் 

பட்டதாரி செவிலியர் 

விடுதிக்காப்பாளர் 

இளநிலை செயலக உதவியாளர் 

கணக்காளர் 

மற்றும் ஆய்வக உதவியாளர் .

கல்வித்தகுதி: 

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, இளங்கலை, முதுகலைப் பட்டப்படிப்புகள் அல்லது பி.எட்., எம்.எட்., நர்சிங் முடித்தவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:-

முதல்வர் பதவிக்கு விண்ணப்பிக்க 50 வயதுக்குள் இருக்க வேண்டும்

 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு விண்ணப்பிக்க 40 வயதுக்குள் இருக்க வேண்டும்

விடுதிக்காப்பாளர் பதவிக்கு 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

மற்ற பதவிகளுக்கு பொதுவாக 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்:-

 23.10.2025

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://nests.tribal.gov.in/index.php?lang=1

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback