சுதந்திர தின விழா சலுகையாக 1279 ரூபாயில் விமான டிக்கெட் - ஏர் இந்தியா அறிவிப்பு air india freedom sale booking online
ஏர் இந்தியா சுதந்திர தினத்தை முன்னிட்டு 1279 ரூபாய் முதல் விமான கட்டண சலுகையை வழங்குகிறது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம், இந்த சலுகையை சுதந்திர தின விற்பனை என்று அறிவித்துள்ளது.
இதில், எக்ஸ்பிரஸ் லைட் கட்டணத்தில், 1947 ரூபாய் முதல் விமான டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. இந்த சலுகை விமான நிறுவனத்தின் இணையதளத்தில் மட்டுமே கிடைக்கும், மேலும், செப்டம்பர் 30, 2024 வரையிலான பயணத்திற்கு, ஆகஸ்ட் 5 வரை முன்பதிவு செய்யலாம்
இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை ஒட்டி, ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்கள், தங்கள் பயணிகள் அனைவருக்கும் தள்ளுபடி சலுகை விமான கட்டணங்களை அறிவித்துள்ளது.
உள்நாட்டு விமான பயணங்களுக்கான கட்டணம் ரூ.1,279 முதல் தொடங்குகிறது. அதைப்போல் வெளிநாடுகளுக்கு செல்லும் சர்வதேச விமான பயணிகள் காண கட்டணம் ரூ.4,279 முதல் தொடங்குகிறது. அதைப்போல் பயணிகள், தங்களுடைய லக்கேஜ்களை எடுத்துச் செல்வதற்கும் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த சலுகை விமான டிக்கெட்டுகளை, அடுத்த ஆண்டு, 2026 மார்ச் 31ஆம் தேதி வரையில், எப்போது வேண்டுமென்றாலும் பயன் படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி திங்கட்கிழமை, ஆகஸ்ட் 11 முதல், ஆகஸ்ட் 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை, நள்ளிரவு 11.59 மணி வரையில், இணையதளம், செல்போன் ஆப்,டிக்கெட் கவுண்டர்கள் உட்பட அனைத்து விதங்களிலும், ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு இந்த சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
5 மில்லியன் பயணிகளுக்கு, இந்த சலுகைகள் கிடைக்கும்.
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://www.airindiaexpress.com/offer-details?offerid=Static_FREEDOMSALE
Tags: தமிழக செய்திகள்